இப்ராகிம் பற்றி இனி பேச வேண்டாம் என, ம.ஜ.த., முடிவு

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : ம.ஜ.த., வில் இணைய விருப்பம் தெரிவித்து, இறுதி வினாடியில், காங்கிரசில் நீடிப்பதாக கூறிய, எம்.எல்.சி., இப்ராகிம் பற்றி இனி பேச வேண்டாம் என, ம.ஜ.த., முடிவு செய்துள்ளது. காங்கிரசில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறி வந்த, எம்.எல்.சி., இப்ராகிம், சில மாதங்களுக்கு முன், அக்கட்சியை விட்டு விலகி, ம.ஜ.த.,வில் இணைய திட்டமிட்டார். இதையடுத்து, ம.ஜ.த., தேசிய தலைவர்

பெங்களூரு : ம.ஜ.த., வில் இணைய விருப்பம் தெரிவித்து, இறுதி வினாடியில், காங்கிரசில் நீடிப்பதாக கூறிய, எம்.எல்.சி., இப்ராகிம் பற்றி இனி பேச வேண்டாம் என, ம.ஜ.த., முடிவு செய்துள்ளது.

காங்கிரசில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறி வந்த, எம்.எல்.சி., இப்ராகிம், சில மாதங்களுக்கு முன், அக்கட்சியை விட்டு விலகி, ம.ஜ.த.,வில் இணைய திட்டமிட்டார். இதையடுத்து, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். இப்ராகிம் கட்சிக்கு வந்தால், அவரை மாநில தலைவராக அமர்த்த, ம.ஜ.த., திட்டமிட்டது; கட்சியின் பிற தலைவர்களும் சம்மதித்தனர். இடைத்தேர்தல் நேரத்தில், இப்ராகிம் கட்சிக்கு வந்தால், முஸ்லிம் ஓட்டுகளை ஈர்க்கலாம் என்பது, ம.ஜ.த., எண்ணமாகவும் இருந்தது.

ஆனால், இறுதி வினாடியில், எதிர்கட்சி தலைவர் சித்தராமையா தலையிட்டு, இப்ராகிமை சமாதானம் செய்ததால், அவர் காங்கிரசிலேயே நீடிக்க முடிவு செய்தார்.ம.ஜ.த.,வில் சேர்வதாக நாடகமாடி, தேவகவுடா, குமாரசாமியை சந்தித்ததன் மூலம், தன் செல்வாக்கை உயர்த்த முற்பட்ட இப்ராகிமின் நடவடிக்கையால், ம.ஜ.த., எரிச்சலடைந்துள்ளது. இனி எப்போதும், இப்ராகிம் பற்றி பேசக்கூடாது என முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X