பொது செய்தி

இந்தியா

அக்கடா... துக்கடா... கர்நாடகா! - 1

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
15 நாளுக்கு ஒரு முறைகொரோனா சோதனைகுடகு: குடகு மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பை தடுக்க, 15 நாட்களுக்கு ஒரு முறை, பரிசோதனை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, குஷால் நகர் அரசு முதல் நிலைக்கல்லுாரியில், மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் கொரோனா சோதனை செய்யப்பட்டது.இதில், இரு மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள்

15 நாளுக்கு ஒரு முறைகொரோனா சோதனைகுடகு: குடகு மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பை தடுக்க, 15 நாட்களுக்கு ஒரு முறை, பரிசோதனை செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, குஷால் நகர் அரசு முதல் நிலைக்கல்லுாரியில், மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் கொரோனா சோதனை செய்யப்பட்டது.இதில், இரு மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்த மாணவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது; அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

......பல்கலையில் யானையை பிடிக்ககும்கியை வரவழைத்த வனத்துறைதார்வாட்: தார்வாட் கர்நாடகா பல்கலை வளாகத்தில், கடந்த, 18ல், யானை ஒன்று நடமாடி பீதியை ஏற்படுத்தியது.இதே யானை, மறுநாளும் பல்கலை வளாகத்தில் தென்பட்டது. அங்கிருந்து போலீஸ் பயிற்சி நிலைய பின்புறம் சென்ற யானை, நெடுஞ்சாலையை தாண்ட முயன்றது. ஆனால், வாகனங்கள் அதிகமாக சென்று கொண்டிருந்ததால், திரும்பி சென்றது.தகவலறிந்து வனத்துறையினர் வருவதற்கு முன், யானை சென்றுவிட்டது. இதனால் வனத்துறை அதிகாரிகள் ஷிவமொகா சக்ரேபைலு முகாமில் உள்ள கும்கி யானைகளின் உதவியுடன், அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.போலீஸ் பயிற்சி பள்ளி, கேந்திரிய வித்யாலயா, மைலாரா லிங்கேஸ்வரா நகரா, நுக்கிகேரி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தேவையின்றி ஒரே இடத்தில் கூட வேண்டாம்.கும்பல் கூடினால், யானையை பிடிப்பதற்கு தடையாக இருக்கும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்............... பணிக்கு தடை ஏற்படுத்திய3 ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'தார்வாட்: தார்வாடிலிருந்து ஹுப்பள்ளிக்கு, கடந்த, 14ல் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, ஐந்து ஊழியர்கள், பஸ்சை தடுத்து நிறுத்தி, டிரைவருக்கு மாலை அணிவித்து. பஸ்சை இயக்க வேண்டாம் என கூறி தடை ஏற்படுத்தினர்.இவர்கள் மீது வித்யாநகர் காவல் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது. மற்ற, இருவர், வேறொரு சம்பவத்தில் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.............மலை மஹாதேஸ்வரா கோவிலில்லாக் - டவுன் வதந்திக்கு விளக்கம்சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகா, மலை மஹாதேஸ்வரா கோவிலில், இன்று முதல், லாக் -- டவுன் செய்யப்படுவதாக, சமூக வலைதளங்களில் பரவியது. இது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து கோவில் ஆணைய செயலர் ஜெயவிபசாமி கூறுகையில், ''சமூக வலைதளங்களில் மலை மஹாதேஸ்வரா கோவில் லோகோவுடன், பொய் தகவல்கள் பரவி வருகிறது.''இதை யாரும் நம்ப வேண்டாம். கோவில் லாக் - டவுன் செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் இருந்தோ அல்லது அரசிடம் இருந்தோ, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.''திருவிழாக்கள் இருக்காது. உடல் வெப்ப பரிசோதனை, கிருமி நாசினி, முக கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கடைகள் எதுவும் அடைக்கப்படவில்லை.லட்டு பிரசாத விற்பனை இருக்கும். தீர்த்தம் மட்டும் கிடையாது. இது அரசின் உத்தரவு வரும் வரை தொடரும்,'' என்றார்..............காய்கறிகள் விலை சரிவால்விவசாயிகள் அதிர்ச்சிகொப்பால்: பஸ் ஸ்டிரைக்கால், கொப்பால் மாவட்டத்தில், காய்கறிகள் விலை கடும் சரிவை கண்டுள்ளது.மார்க்கெட்டுகளில், 10 கிலோ தக்காளி, 20 - 30 ரூபாய்; ஒரு பெட்டி தக்காளி, 40 - 60 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. 10 கிலோ கத்திரிக்காய், 30 - 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இதேபோல, முட்டைக்கோஸ், வெண்டைக்காய், பீர்க்கன் காய் போன்ற பல வகையான காய்கறிகளும் விலை சரிவை கண்டுள்ளன.வெள்ளரிக்காய், கோவக்காய் தவிர மற்ற அனைத்து காய்கறிகளும் விலை குறைந்து விட்டது.விவசாயிகளுக்கு காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் செலவு கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் காய்கறிகளை அறுவடை செய்யாமல் வயலிலேயே விட்டு விடுகின்றனர்.'பஸ் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்தால் மட்டுமே உரிய விலை கிடைக்கும்' என விவாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X