பொது செய்தி

இந்தியா

50 மின்சார பஸ்கள்! பெங்களூரிலிருந்து கர்நாடகாவின் பல நகரங்களுக்கு...மத்திய அரசிடம் மானியம் கேட்கிறது கே.எஸ்.ஆர்.டி.சி.,

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரிலிருந்து, கர்நாடகாவின் பல நகரங்களுக்கு, மின்சார பஸ்களை இயக்கும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையில், மின்சாரத்தில் இயங்கும், 50, 'ஏசி' பஸ்களை பெற, கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பஸ்சுக்கும், தலா, ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கும்படி, மத்திய அரசிடம், கே.எஸ்.ஆர்.டி.சி., கோரிக்கை விடுத்துள்ளது.பெங்களூரில் அதிகரிக்கும், காற்று மாசுவை
50 மின்சார பஸ்கள்!  பெங்களூரிலிருந்து கர்நாடகாவின் பல நகரங்களுக்கு...மத்திய அரசிடம் மானியம் கேட்கிறது கே.எஸ்.ஆர்.டி.சி.,

பெங்களூரு : பெங்களூரிலிருந்து, கர்நாடகாவின் பல நகரங்களுக்கு, மின்சார பஸ்களை இயக்கும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையில், மின்சாரத்தில் இயங்கும், 50, 'ஏசி' பஸ்களை பெற, கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு பஸ்சுக்கும், தலா, ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கும்படி, மத்திய அரசிடம், கே.எஸ்.ஆர்.டி.சி., கோரிக்கை விடுத்துள்ளது.பெங்களூரில் அதிகரிக்கும், காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில், பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம், மின்சார பஸ்களை இயக்கி வருகிறது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதனால் உற்சாகமடைந்த, பி.எம்.டி.சி., மின்சார பஸ்களை, ஒப்பந்த அடிப்படையில் இயக்க ஆலோசிக்கிறது. மின்சார பஸ்களுக்காக, மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. இந்நிலையில், கே.எஸ்.ஆர்.டி.சி.,யும் கூட, மின்சார பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் பெற திட்டமிட்டுள்ளது.

இந்த பஸ்களை பெங்களூரிலிருந்து, மாநிலத்தின் பல நகரங்களுக்கு இயக்குவது, கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் எண்ணமாகும்.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, மின்சார வாகனங்களை பயன்படுத்துவதை, ஊக்கப்படுத்தும் வகையில், 'பேம்' எனும் 'பாஸ்டர் அடாப்ஷன் அண்ட் மனுபேக்டரிங் ஆப் எலக்ட்ரிக் வெகிகல்' -என்ற திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தியது. தற்போது திட்டத்தின், இரண்டாவது கட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் மின்சார பஸ்களை பெற, ஒவ்வொரு பஸ்சுக்கும், 55 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது.எனவே, தன் பொருளாதார நெருக்கடியை, குறைக்கும் நோக்கில், ஒரு பஸ்சுக்கு ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கும்படி, மத்திய அரசிடம், கே.எஸ்.ஆர்.டி.சி., கோரியுள்ளது

.கே.எஸ்.ஆர்.டி.சி., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பேம் திட்டத்தின், முதலாம் கட்டத்தில் மின்சார பஸ்கள் வாங்க, தலா, ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.மின்சார பஸ்களின் விலை, 2.5 கோடி ரூபாயாகும். இவற்றை பராமரிக்க, அதிகம் செலவாகும். எனவே ஒப்பந்த அடிப்படையில், பஸ்களை பெற முடிவு செய்தோம். இதற்கு, ஒரு பஸ்சுக்கு, 55 லட்சம் ரூபாய் மானியம் நிர்ணயிக்கப்பட்டது.இதில், 1 கி.மீ.,க்கு நிர்ணயித்த தொகையை, ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் பொருளாதார நிலையும், நன்றாக இல்லை.எனவே, நாங்கள் ஒரு கோடி ரூபாய் கேட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்த கோரிக்கையை, மத்திய அரசு ஏற்கும் என எதிர்பார்க்கிறோம்.முதற்கட்டமாக, மின்சார பஸ்கள், பெங்களூரிலிருந்து, மைசூரு, விராஜ்பேட், ஷிவமொகா, தாவணகரே நகரங்களுக்கு இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டமிட்டுள்ளது.

பயணியரின் வரவேற்பை கவனித்து, மாநிலத்தின் மற்ற நகரங்களுக்கும், இந்த சேவை விஸ்தரிக்கப்படும்.இந்த பஸ்கள், 12 மீட்டர் நீளம், 45 இருக்கைகள் கொண்டதாக இருக்கும். குளிர்ச்சாதன வசதி உட்பட, அதிநவீன வசதிகள் இருக்கும். இந்த பஸ்கள் தினம், 500 கி.மீ., இயங்கும் திறன் கொண்டவையாகும். ஒப்பந்த அடிப்படையில், 50 மின்சார பஸ்களை பெற, ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் நிபந்தனைப்படி, ஒப்பந்த காலம், 10 ஆண்டுகளாகும்.டெண்டரில் மூன்று, நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில் ஹைதராபாத்தை சேர்ந்த, 'ஒலெக்ட்ரா கிரீன் டச்' என்ற நிறுவனம், மற்ற நிறுவனங்களை விட, குறைவான தொகை குறிப்பிட்டுள்ளது.மின்சார பஸ்களை இயக்க, சார்ஜிங் கட்டணம் உட்பட, 1 கி.மீ.,க்கு, 57.70 ரூபாய் கேட்கிறது. பேச்சு நடந்த பின், 55 ரூபாய்க்கு சம்மதித்துள்ளது.பஸ்களை வழங்கிய நிறுவனமே, ஓட்டுனரை நியமிக்க வேண்டும். பஸ்களின் பராமரிப்பு, வாகன விபத்து காப்பீடு, பயணியரின் விபத்து காப்பீடு என, அனைத்தும், அந்நிறுவனத்தின் பொறுப்பாகும். நடத்துனரை மட்டும், கே.எஸ்.ஆர்.டி.சி., நியமிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X