சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'தூக்கி அடிச்சுப்பிடுவேன்... இங்கிருந்து போயிடுங்க...' கொரோனா பரிசோதனைக்கு அழைத்தபோது தாக்குதல்

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
கோவை:கோவையில், கொரோனா பரிசோதனைக்கு அழைக்கச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மீது, ஒருவர் பொருட்களை வீசி, மொபைல் போனை பறித்து துாக்கி எறிந்து, தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளை அடையாளம் காணவும், அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை
 'தூக்கி அடிச்சுப்பிடுவேன்... இங்கிருந்து போயிடுங்க...' கொரோனா பரிசோதனைக்கு அழைத்தபோது தாக்குதல்

கோவை:கோவையில், கொரோனா பரிசோதனைக்கு அழைக்கச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மீது, ஒருவர் பொருட்களை வீசி, மொபைல் போனை பறித்து துாக்கி எறிந்து, தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளை அடையாளம் காணவும், அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், வார்டுக்கு ஒன்று வீதம் நாளொன்றுக்கு, 100 மருத்துவ முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, மத்திய மண்டலம், 52வது வார்டில் நேற்று முகாம் நடத்தப்பட்டது.

பரிசோதனைக்கு வருமாறு, வீதி வீதியாகச் சென்று, ஒவ்வொரு வீட்டிலும் வசிப்போரிடம் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அறிவுறுத்தினர்.சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் தலைமையிலான குழுவினர், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மூன்றாவது வீதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் வசிப்போரை, பரிசோதனைக்கு வர அழைத்தனர். இரும்பு கதவு உள்பக்கமாக மூடப்பட்டிருந்தது. அங்கிருந்தவர், படுகோபத்துடன், 'துாக்கி அடிச்சுப்பிடுவேன். இங்கிருந்து போயிடுங்க... நோய் இருக்குன்னு, வந்துட்டானுக, கொலைகார பாவிக' என, ஒருமையில் திட்டியதோடு,

சுகாதார மேற்பார்வையாளர் வைத்திருந்த மொபைல் போனை பறித்து, துாக்கி வீசினார். அங்கிருந்த பூச்செட்டியை அவர்கள் மீது தட்டி விட்டார். மேலும், அங்கிருந்த பொருட்களை அவர்கள் மீது துாக்கி எறிந்த வண்ணம் இருந்தார்.அதிர்ச்சிக்குள்ளான சுகாதாரப் பிரிவினர், 'தொற்று வராமல் உங்களை பாதுகாக்கவே, பரிசோதனைக்கு அழைக்கிறோம்' என்றனர். மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று, அங்கிருந்தவர்களை சமாதானம் செய்ய முயன்றபோதும், அங்கிருந்தவர், ஆத்திரத்தால் தன்னைத்தானே தாக்கிக் கொண்டார்.

இதையடுத்து, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக, சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில்புகார் கொடுத்தார். அதன்படி, வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை!

மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் கூறுகையில், 'கடந்தாண்டு கொரோனா மருத்துவ முகாம் நடத்தியபோது, நாளொன்றுக்கு, 5,000 சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினோம். இப்போது பரிசோதனைக்கு வரவே மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஒத்துழைக்க மறுப்பதால், தொற்று பரவலை கட்டுப்படுத்த முடிவதில்லை.

மருத்துவத்துறை, சுகாதாரத்துறையினர் பல்வேறு அழுத்தங்களுக்கு இடையே பணி புரிகின்றனர். அவர்களும் மனிதர்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது. அதையும் கடந்தே, களப்பணியாற்றுகின்றனர். பொதுமக்கள் கரம் கோர்த்து செயல்பட்டால் மட்டுமே தொற்று மேலும் பரவாமல் தடுக்க முடியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGESAN - namakkal,இந்தியா
27-ஏப்-202117:29:45 IST Report Abuse
MURUGESAN சும்மா கூப்பிட்டா யாரும் வரமாட்டாங்க சார் . ஊசி போட்டுக்கிட்டா ஆயிரம் ரூவா பணம் தர்றேன்னு சொல்லிப்பாருங்க வந்து கியூவுல நிப்பாங்க. போங்க சார் போய் நீங்கதான் வீடு வீடா போய் பரிசோதனை பண்ணனும் ஊசி போடணும். அதே நேரம் வீடுகளுக்கே வந்து பரிசோதனை செய்ய வந்தால் மக்கள் கண்டிப்பா அரசுடன் ஒத்துழைக்கவேண்டும்.
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
25-ஏப்-202118:27:32 IST Report Abuse
Jayvee அது பெண்கள் விடுதின்னா அந்த பனியன் போட்ட குண்டன் ? ஒன்னு சிறுபான்மை கும்பலா இருக்கும் இல்லாட்டி நெக்ஸல் கும்பலா இருக்கும் ?
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
23-ஏப்-202119:47:14 IST Report Abuse
krishnamurthy என்ன விசாரணை. பனி செய்ய விடாமைக்கு கைது செய்ய வேண்டியதுதானே
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்யாரு என்னன்னு தெரிஞ்சுக்கணும் ஆழந்தெரியாம காலை விடமுடியாது தேறுமா? சிக்குமா? சிக்கலாயிடுமா? பின்னணி என்ன? BJP காரனாயிருந்தா பீஸ் பீஸாக்கிடுவானுங்களே?...
Rate this:
Changes - Pkt,இந்தியா
25-ஏப்-202119:16:59 IST Report Abuse
Changesஇது நிச்சயம் திமுக காரனாதான் இருக்கும். அந்த கோஷ்டிதான் இந்த மாதியெல்லாம் செய்யும். ஒரு பிரியாணி பொட்டலம், குவாட்டர் கொடுத்து இருந்தால் நாக்கை தொங்க போட்டுகொண்டு வந்துஇருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X