மக்களை கொரோனாவில் இருந்து காக்க உரிய நடவடிக்கை வேண்டும்

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''கொரோனாவால் மக்கள் அவதிப்படும் நிலையில், அமைச்சர்கள் அலட்சியமாக பேசுவது சரியல்ல. கடுமையான நடவடிக்கை எடுத்து, மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்,'' என, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் செலுவராயசாமி வலியுறுத்தினார். பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் முதல்வர் எடியூரப்பா சிகிச்சை பெறுகிறார். ஆனால், அமைச்சர்கள்

பெங்களூரு : ''கொரோனாவால் மக்கள் அவதிப்படும் நிலையில், அமைச்சர்கள் அலட்சியமாக பேசுவது சரியல்ல. கடுமையான நடவடிக்கை எடுத்து, மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும்,'' என, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் செலுவராயசாமி வலியுறுத்தினார்.

பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் முதல்வர் எடியூரப்பா சிகிச்சை பெறுகிறார். ஆனால், அமைச்சர்கள் குழப்பமாக பேசுகின்றனர்.மக்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, அவசர நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு, காலத்தை வீணாக்குவது துரதுஷ்டம்.அனைத்திற்கும் முதல்வர் தான் வர வேண்டிய அவசியமில்லை. அனுபவமிக்க அமைச்சர்கள் உள்ளனர். இவர்களுக்கு மக்களின் உணர்வு புரியவில்லையா?கடந்தாண்டு கொரோனா பரவிய போது, அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையை, இப்போது காண முடியவில்லை. அலட்சியமாக பேசுவதில் காலம் கடத்துகின்றனர்.படுக்கை வசதி, ஆக்சிஜன் பற்றாக்குறையால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மற்றொரு பக்கம் கொரோனா அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை விட்டு, விட்டு இப்படி நடந்து கொண்டால், மக்களே சரியான பாடம் கற்பிப்பர்.முக்கிய புள்ளிகள், மருத்துவமனையில் சேர்ந்தால், குணமடைந்து வெளியே வருகின்றனர். ஆனால், ஏழைகள் உயிரை இழக்கின்றனர். இவர்களின் உயிருக்கு மதிப்பில்லையா?அமைச்சர்கள் அவரவர் துறைகளின் பணிகளை, தற்காலிகமாக ஒதுக்கி வைத்து, மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்.அண்டை நாடுகளுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்கி, உபகாரம் செய்வதாக, மத்திய அரசு மார்தட்டி கொள்கிறது. ஆனால் நம் நாட்டிலேயே, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. இதைப்பற்றி பிரதமர் கவனித்தாரா?மருத்துவமனைகளில், படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டால், சமுதாய பவன்கள், ஓட்டல்களில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலைக்கு, அரசே நேரடி காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X