ஆபாச படம் பார்த்து மனைவிக்கு சித்ரவதை

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : ஆபாச படங்களை பார்த்து, மனைவியை சித்ரவதை செய்த கணவர் மீது, காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. பெங்களூரின் ஆடுகோடியின், சீகேஹள்ளியில் வசிக்கும் அபினாஷ், 27, என்பவருக்கும், தேவனஹள்ளியை சேர்ந்த, 22 வயது இளம் பெண்ணுக்கும், 2018ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், இரண்டு, மூன்று மாதங்கள் ஒழுங்காக இருந்த கணவர், நாளடைவில் தொந்தரவு கொடுக்க துவங்கினார்.ஆபாச

பெங்களூரு : ஆபாச படங்களை பார்த்து, மனைவியை சித்ரவதை செய்த கணவர் மீது, காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது.

பெங்களூரின் ஆடுகோடியின், சீகேஹள்ளியில் வசிக்கும் அபினாஷ், 27, என்பவருக்கும், தேவனஹள்ளியை சேர்ந்த, 22 வயது இளம் பெண்ணுக்கும், 2018ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின், இரண்டு, மூன்று மாதங்கள் ஒழுங்காக இருந்த கணவர், நாளடைவில் தொந்தரவு கொடுக்க துவங்கினார்.ஆபாச படங்களை பார்ப்பதுடன், அதே போன்று நடக்கும்படி, மனைவியை பலவந்தப்படுத்தினார். இதற்கு மறுத்ததால், அவரை தாக்கினார். மதுபானம் அருந்தும்படி கட்டாயப்படுத்தினார்.இவ்விஷயத்தை பெற்றோரிடம் கூறினால், உயிரோடு எரித்து கொலை செய்வதாக மிரட்டினார்.

அது மட்டுமின்றி, தன் சிறுநீரை குடிக்கும்படி, அடித்து துன்புறுத்தினார்.கணவரின் நடவடிக்கை பற்றி, மாமியாரிடம் கூறிய போது, மகன் சொற்படி நடந்து கொள்ளும்படி கூறினார். மனம் நொந்த மனைவி, காடுகோடி காவல் நிலையத்தில், புகார் அளித்தார். விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.காடுகோடி காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X