மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
மைசூரு : ''கொரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரிப்பதால், மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. பொது மக்களும் கொரோனா விதிமுறைகளை, பின்பற்ற வேண்டும்,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மைசூரின், கே.ஆர்.மருத்துவமனைக்கு, அமைச்சர் சோமசேகர், நேற்று திடீர் வருகை தந்து பார்வையிட்டார். வார்டுகள் வசதி, கொரோனா நோயாளிகளுக்கு

மைசூரு : ''கொரோனா தொற்று, நாளுக்கு நாள் அதிகரிப்பதால், மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. பொது மக்களும் கொரோனா விதிமுறைகளை, பின்பற்ற வேண்டும்,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மைசூரின், கே.ஆர்.மருத்துவமனைக்கு, அமைச்சர் சோமசேகர், நேற்று திடீர் வருகை தந்து பார்வையிட்டார். வார்டுகள் வசதி, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகள் சேகரிப்புள்ளதா, நோயாளிகளுக்கு தரமான உணவு, சிற்றுண்டி கிடைக்கிறதா என, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.பின், அவர் பேசியதாவது:மருத்துவமனையில் என்ன பிரச்னைகள் இருந்தாலும், என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். மருந்துகள் உட்பட, என்ன தேவைகள் இருந்தாலும், என்னிடம் கூறினால், அரசிடம் பேசி, பிரச்னைகளை தீர்த்து வைப்பேன்.எந்த காரணத்தை கொண்டும், மைசூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்களுக்கு, தொந்தரவு ஏற்படக்கூடாது.

இவ்விஷயத்தில் நான், மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் உறுதியாக இருக்கிறோம். கொரோனா 2வது அலை தீவிரமாக உள்ளதால், பொதுமக்களும் கூட இதை தீவிரமாக கருத வேண்டும். தாமாக முன் வந்து, அரசுடன் கைகோர்த்து, கொரோனாவை விரட்ட வேண்டும். நோய் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கொரோனா பரவாமல் தடுக்க வேண்டும்; யாரும் தேவையின்றி, வெளியே நடமாடக்கூடாது. அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கைகளை கழுவி சுத்தப்படுத்த வேண்டும். சமூக விலகலை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X