ஓட்டு எண்ணிக்கை முறையாக நடக்க வேண்டும் :கமல் மனு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை முறையாக நடக்க வேண்டும் :கமல் மனு

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (33+ 100)
Share
சென்னை:-''ஓட்டுப்பதிவும் ஓட்டு எண்ணிக்கையும் முறையாக நடத்தப்பட்டு முடிவுகள் நேர்மையாக அறிவிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை உருவாக்குவது தேர்தல் கமிஷனின் கடமை'' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்தார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு அளித்த பின் அவர் அளித்த பேட்டி:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள
ஓட்டு எண்ணிக்கை ,தேர்தல் கமிஷன், கமல் மனு

சென்னை:-''ஓட்டுப்பதிவும் ஓட்டு எண்ணிக்கையும் முறையாக நடத்தப்பட்டு முடிவுகள் நேர்மையாக அறிவிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை உருவாக்குவது தேர்தல் கமிஷனின் கடமை'' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்தார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு அளித்த பின் அவர் அளித்த பேட்டி:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' உண்மையான ஸ்ட்ராங் ரூம் ஆக இருக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்கள் அடிக்கடி செயல் இழந்து விடுவது; மர்ம கன்டெய்னர்கள் நள்ளிரவில் வளாகத்திற்குள் நுழைவது; திடீர் திடீரென 'வைபை' வசதிகள் வளாகத்திற்கு உள்ளே வெளியே உருவாவது; 'லேப்டாப்'புடன் மர்ம நபர்கள் ஸ்ட்ராங் ரூம் அருகே நடமாடுவதும் பல விதமான கேள்விகளை எழுப்புகின்றன.விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். தேர்தல் முறையாக நடத்தப்பட்டு முடிவுகள் நேர்மையாக அறிவிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை வாக்காளர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளுக்கு உருவாக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் கடமை. ஏற்கனவே 30 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதில்லை.

தேர்தலிலும் ஓட்டு எண்ணிக்கையிலும் இதுபோன்ற மர்மங்கள் சந்தேகங்கள் நீடித்தால் பொதுமக்களின் ஜனநாயக பங்களிப்பு இன்னும் குறையும் அபாயம் உண்டு. அது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும்.வாக்காளர் பட்டியல் குளறுபடிகளையும் புகாராக அளித்துள்ளோம். இது முதற்கட்டம் தான். இன்னும் நிறைய புகார்கள் எங்களுக்கு வந்தபடி உள்ளன. அவற்றை திரட்டி அவர்கள் பார்வைக்கு வைக்க உள்ளோம். இது எங்களை காப்பாற்றி கொள்ளும் முயற்சி மட்டுமல்ல; ஜனநாயகத்தை காப்பாற்றும் முயற்சி.

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் பல மர்மமான விஷயங்கள் நிகழ்கின்றன. பல வாகனங்கள் வந்து செல்வது சந்தேகத்திற்குரியது. இயந்திரம் நல்லதாக இருந்தாலும் கண்டவர்கள் கையில் நடமாடுவது சந்தேகத்திற்குரியது.ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தேர்தல் கமிஷன் சரியாக செயல்படவில்லை. இதை சீர்திருத்த என்ன செய்யலாம் என்ற பரிந்துரையை அளித்துள்ளோம். நடிகர்கள் ஓட்டளிக்க எப்படி வந்தனர் என்பதை விட அவர்கள் ஓட்டளிக்க வந்தது சந்தோஷம்.இவ்வாறு கமல் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X