பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவலை தடுக்க  விழிப்புணர்வு

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
உடுப்பி : உடுப்பி மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகரிப்பதால், மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. விதிமுறையை மீறி, தனியார் பஸ்களில் அளவுக்கு அதிகமாக ஏற்றிய, பேருந்து நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உடுப்பி நகர் மற்றும் மனிப்பாலில், கொரோனா தொற்று நாளுக்கு அதிகரிக்கிறது. எனவே, முக கவசம் அணிவது, சமூக விலகலை

உடுப்பி : உடுப்பி மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகரிப்பதால், மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. விதிமுறையை மீறி, தனியார் பஸ்களில் அளவுக்கு அதிகமாக ஏற்றிய, பேருந்து நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உடுப்பி நகர் மற்றும் மனிப்பாலில், கொரோனா தொற்று நாளுக்கு அதிகரிக்கிறது. எனவே, முக கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது தொடர்பாக, போலீஸ் துறையும, மாவட்ட நிர்வாகமும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.நகரில் இயங்கும் தனியார் பஸ்களில், முக கவசம் அணியாமல், சமூக விலகலை பின்பற்றாமல் பயணிப்பதாக தெரிந்தது. எனவே, உடுப்பி மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ், நேற்று நேரடியாக நடவடிக்கையில் இறங்கினார். பல இடங்களில், அதிக பயணியரை நிறுத்தி, ஏற்றிச் செல்லும் பஸ்களை, தடுத்து நிறுத்தி ஓட்டுனர்கள், நடத்துனர்களை கண்டித்தார்.முக கவசம் அணியாமல், சமூக விலகலை பின்பற்றாமல் நின்று பயணித்த பயணியரை கீழே இறக்கினர்.

அவர்களுக்கு நடத்துனரிடமிருந்து, பணத்தை திரும்ப பெற்றுக்கொடுத்தார்.முக கவசம் அணியாத, சமூக விலகலை பின்பற்றாதவர்கள், பஸ்களில் பயணிக்க முடியாது என, எச்சரித்தார்.இது போல, ஐந்து பஸ்களை, தடுத்து நிறுத்தி எச்சரித்த, மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ், இனி இது போன்று நடந்து கொள்ளக்கூடாது என அறிவுறுத்தினார்.கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதோர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X