பொது செய்தி

இந்தியா

மெட்ரோ ரயில் விரிவாக்கம் ; மத்திய அரசு ஒப்புதல்

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தில், 2ஏ மற்றும், 2பி கட்ட பணிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தில், ரயில்வே பணிகள், பல கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்டமாக, 2011ல் பணிகள் துவக்கப்பட்டன. தொடர்ந்து விரிவாக்கப்பணிகள் நடந்தன. இரண்டு கட்டங்களாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.இதில், 2ஏ மற்றும் 2பி கட்டங்களில், மைசூரு சாலை - கெங்கேரி

பெங்களூரு : பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தில், 2ஏ மற்றும், 2பி கட்ட பணிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தில், ரயில்வே பணிகள், பல கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்டமாக, 2011ல் பணிகள் துவக்கப்பட்டன. தொடர்ந்து விரிவாக்கப்பணிகள் நடந்தன. இரண்டு கட்டங்களாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.இதில், 2ஏ மற்றும் 2பி கட்டங்களில், மைசூரு சாலை - கெங்கேரி வரை; பையப்பனஹள்ளி - ஒயிட்பீல்டு; நாகசந்தரா - மாதவரா வரை, மற்றும் ஆர்.வி. சாலை - பொம்மசந்தரா வரை.காலேனா அக்ரஹாரா - நாகவரா; மத்திய சில்க் போர்டு - கே.ஆர்.புரம் வரை, கே.ஆர்.புரம் - கெம்பகவுடா விமான நிலையம் வரை, 124.57 கி.மீ., ரயில்வே பாதையும், 86 நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இப்பணிகளில் தற்போது, 2ஏ கட்ட பிரிவில், சில்க் போர்டு - கே.ஆர்.,புரம் பகுதி வரை மற்றும் 2பி கட்ட பிரிவில், கே.ஆர்.புரம் - கெம்பகவுடா விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை துவக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்த தகவலை, ரயில்வே அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.மேலும், இப்பணிகள், 58.19 கி.மீ.,க்கு, 14 ஆயிரத்து, 788 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X