ஊசி போட்டுக்கோ...! உயிரை காத்துக்கோ...! கோயம்பேடில் விழிப்புணர்வு பிரசாரம்| Dinamalar

தமிழ்நாடு

ஊசி போட்டுக்கோ...! உயிரை காத்துக்கோ...! கோயம்பேடில் விழிப்புணர்வு பிரசாரம்

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை : கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மேற்கொண்டனர்.சென்னையில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன. கொரோனா பாதிப்பில் இருந்து தப்புவதற்கு, தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் மிக சிறந்த வழி என,
 ஊசி போட்டுக்கோ...! உயிரை காத்துக்கோ...! கோயம்பேடில் விழிப்புணர்வு பிரசாரம்

சென்னை : கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மேற்கொண்டனர்.சென்னையில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ளது.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன. கொரோனா பாதிப்பில் இருந்து தப்புவதற்கு, தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் மிக சிறந்த வழி என, மருத்துவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கோயம்பேடு மார்க்கெட்டில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள வியாபாரிகள், கடை ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என, அங்காடி நிர்வாக குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதை ஏற்று, மார்க்கெட்டில், 5,000 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.ஆனால், நுாற்றுக்கணக்கானோர் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு இல்லாமல், அலட்சியமாக உள்ளனர். எனவே, கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் வாயிலாக, இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் முத்துக்குமார், துணைத்தலைவர் பூண்டு முரளி உள்ளிட்ட நிர்வாகிகள், கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் ஊசியின் மாதிரி வடிவ அட்டைகளை கையில் ஏந்தியபடி, மார்க்கெட்டில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். 'போட்டுக்கோ... போட்டுக்கோ... தடுப்பூசி போட்டுக்கோ... காத்துக்கோ... காத்துக்கோ... உயிரை காத்துக்கோ...' என்ற கோஷங்களையும் எழுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X