பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவு: வீதி வீதியாக அறிவிப்பு

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் பேரூராட்சியில், வீதிவீதியாக ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியானது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 20ம் தேதியில் இருந்து, இரவு 10:00 மணி முதல், அதிகாலை 4:00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இத்துடன், ஞாயிறுதோறும், முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தினசரி இரவு 9:00 மணிக்கு, கடை, ஓட்டல் ஆகியவற்றை மூட வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த
 ஊரடங்கு உத்தரவு:  வீதி வீதியாக அறிவிப்பு

அன்னுார்:அன்னுார் பேரூராட்சியில், வீதிவீதியாக ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியானது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 20ம் தேதியில் இருந்து, இரவு 10:00 மணி முதல், அதிகாலை 4:00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இத்துடன், ஞாயிறுதோறும், முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தினசரி இரவு 9:00 மணிக்கு, கடை, ஓட்டல் ஆகியவற்றை மூட வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த அறிவிப்புகள் குறித்து, அன்னுார் பேரூராட்சி சார்பில், வாகனத்தில் பிரசாரம் செய்யப்பட்டது. நேற்று, அன்னுார் கடைவீதி, மெயின் ரோடு, அவிநாசி ரோடு, சொக்கம்பாளையம், குமாரபாளையம் உள்பட பேரூராட்சி முழுவதும் ஒலிபெருக்கி வாயிலாக ஊரடங்கு குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது.மேலும், முக கவசம் அணியாவிட்டால், 200 ரூபாய், சமூக இடைவெளி பின்பற்றாவிட்டால், 500 ரூபாய் அபராதம் என, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X