தாசில்தார் திடீர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தாசில்தார் திடீர் ஆய்வு

Added : ஏப் 20, 2021
Share
தங்கவயல் : தங்கவயல் உதவி, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், தாலுகா தாசில்தார் சுஜாதா, திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்புக்கு முக கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும், சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என, அரசு உத்தரவு உள்ளது.அதன்படி, தங்கவயலில் அனைவரையும் கடைப்பிடிக்க வேண்டுமென தாசில்தார் சுஜாதா

தங்கவயல் : தங்கவயல் உதவி, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், தாலுகா தாசில்தார் சுஜாதா, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்புக்கு முக கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும், சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என, அரசு உத்தரவு உள்ளது.அதன்படி, தங்கவயலில் அனைவரையும் கடைப்பிடிக்க வேண்டுமென தாசில்தார் சுஜாதா நடவடிக்கை எடுத்து வருகிறார்.ராபர்ட்சன் பேட்டையில் முக்கிய சாலைகள், வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள் ஆகியவற்றில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி, அபராதமும் வசூலித்து வருகிறார்.எப்போதுமே கூட்டம் நிறைந்த, உதவி, ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு நேற்று மதியம் திடீரென, தாசில்தார் சுஜாதா வந்தார். சமூக விலகல் இல்லை, நெரிசல் காணப்பட்டது.

சிலர் முக கவசம் அணிய வில்லை. அலுவலக நுழைவாயிலில் கிருமி நாசினி மருந்து இல்லை.இதை கவனித்த அவர், அதிகாரிகளிடம், ''நான் தங்கவயல் தாசில்தார் சுஜாதா. கொரோனா தடுப்புக்கு அரசு உத்தரவை கடைபிடிக்க மாட்டீர்களா. எங்கே கிருமி நாசினி, இப்படி தள்ளு முள்ளுடன் கூட்டம் நிற்பதை ஏன் ஒழுங்கு செய்யவில்லை. பொறுப்போடு செயல்படாததால் உங்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.உதவி, ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், 'சாரி மேடம்' என்றனர். உடனடியாக, கிருமி நாசினி கொண்டு வரப்பட்டது.வரிசையில் இருந்தவர்களை வெளியேற்றி, சமூக விலகல் கடைப்பிடித்து வர வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X