பொது செய்தி

தமிழ்நாடு

மே 2, ஓட்டு எண்ணிக்கையில் யார் எப்படி நடந்துக்கணும்?

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டசபைத் தொகுதிகளுக்கான, ஓட்டு எண்ணிக்கை, வரும் மே 2ம் தேதி, கோவை, அரசு பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.மேட்டுப்பாளையம் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, கடைப்பிடிக்க வேண்டிய, அரசு விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம், நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்
 மே 2, ஓட்டு எண்ணிக்கையில் யார் எப்படி நடந்துக்கணும்?

கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டசபைத் தொகுதிகளுக்கான, ஓட்டு எண்ணிக்கை, வரும் மே 2ம் தேதி, கோவை, அரசு பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.மேட்டுப்பாளையம் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, கடைப்பிடிக்க வேண்டிய, அரசு விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம், நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன் பேசியதாவது:ஓட்டு எண்ணுவதற்கு, 14 டேபிள்கள் போடப்படும். ஓட்டு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அமைதியைப் பேண வேண்டும். மொபைல் போன் எடுத்துவர அனுமதி இல்லை. வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆகியோர், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழை கொண்டு வர வேண்டும். சான்றிதழ் பெற்ற நபர்களில் யாருக்காவது, தெர்மல் ஸ்கேனர், பரிசோதனை யில், காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு உள்ளே செல்ல, அனுமதி மறுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தாமணி, தனி தாசில்தார்கள் ரங்கராஜன், ஜெயசித்ரா, செல்வராஜ், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சூலுாரில் கட்சியினர் தயார்சூலுார் தொகுதியின் ஓட்டு எண்ணிக்கைக்கு செல்லும், 50 அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது. அவர்களுக்கு, அனுமதி அட்டை வழங்கும் பணியும் நடக்கிறது. அதேபோல், அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் முகவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்."ஓட்டு எண்ணிக்கைக்கு, 10 முதல், 14 டேபிள்கள் போடப்பட்டு, ஒரு டேபிளுக்கு, ஒரு மைக்ரோ அப்சர்வர், தலைமை ஓட்டு எண்ணும் அலுவலர், உதவி அலுவலர் பணியமர்த்தப்பட உள்ளனர்," என, அதிகாரிகள் கூறினர். -நமது நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X