மீண்டும் பெங்களூரில் டுலெட் பலகைகள் அதிகம் காணப்படும் நிலை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மீண்டும் பெங்களூரில் 'டுலெட்' பலகைகள் அதிகம் காணப்படும் நிலை

Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
பெங்களூரு : கொரோனா பரவல் காரணமாக, மீண்டும் பெங்களூரில் 'டுலெட்' பலகைகள் அதிகம் காணப்படும் நிலை உருவாகி வருகிறது. பல மாநிலத்தை சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொண்டிருக்கும் தொழில் நகரமாக, பெங்களூரு உள்ளது.பணி காரணமாக, பலர் தங்களின் குடும்பங்களை விட்டு பிரிந்து இங்கு தங்கி வருகின்றனர். பெங்களூரின் வாழ்வியல் சூழல், தொழில்நுட்ப வசதிகள், மற்றும்

பெங்களூரு : கொரோனா பரவல் காரணமாக, மீண்டும் பெங்களூரில் 'டுலெட்' பலகைகள் அதிகம் காணப்படும் நிலை உருவாகி வருகிறது.

பல மாநிலத்தை சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொண்டிருக்கும் தொழில் நகரமாக, பெங்களூரு உள்ளது.பணி காரணமாக, பலர் தங்களின் குடும்பங்களை விட்டு பிரிந்து இங்கு தங்கி வருகின்றனர். பெங்களூரின் வாழ்வியல் சூழல், தொழில்நுட்ப வசதிகள், மற்றும் வேலைவாய்ப்பு என அனைத்தையும் விரும்பி, வசித்து கொண்டிருக்கின்றனர். தற்போது இவர்களி நிலை, தலைகீழலாக மாறியுள்ளது.இதற்கு, கொரோனா பரவல், லாக் - டவுன் முக்கியகாரணமாக உள்ளது. கடந்தாண்டு, கொரோனா பரவல் துவங்கியதுமே, பணி காரணமாக புலம்பெயர்ந்து வந்திருந்த பலரும், சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இந்நிலை, செப்., அக்., மாதங்களில் ஓரளவு மாறியது.

தற்போது, கொரோனா இரண்டாம் அலை வீச துவங்கியதால், மீண்டும் இடம் மாறும் எண்ணத்துக்கு பலரும் மாறி வருகின்றனர்.பெங்களூரில், பணிக்கு செல்பவர்களுக்கான தங்கும் விடுதிகளும், வாடகை வீடுகளின் உரிமையாளர்களுக்கும் கொரோனாவால், கடந்த மார்ச் முதல் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.மறுபக்கம், வீடுகளையும், விடுதிகளிலும் பொருட்களை விட்டுசென்று, ஒரு ஆண்டாக, வாடகை வழங்குவதற்கும் முடியாமல், சிக்கி தவித்தவர்களும் பலர் உள்ளனர்.சூழல் ஓரளவு மாறி, மீண்டும் பணிக்கு திரும்பிய பலருக்கும் கொரோனா இரண்டாவது அலை, மேலும் மன உளைச்சலை அதிகரித்துள்ளது.

பணிக்கு திரும்பியவர்கள், வீடுகள், விடுதிகளில் விட்டு சென்ற பொருட்களை துாய்மைப்படுத்தி கொள்ள ஒரு மாதமானது என்று புலம்புகின்றனர்.இந்நிலையில், மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவலால், பலரும், விடுதிகளை காலி செய்து சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.மேலும், வாடகை வீடு உரிமையாளர்களுக்கும், இந்த நிலை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் பல மாடிகள், காலியாக இருக்கும் காட்சிகள் இப்போது பெங்களூரில் சாதரணமாகி வருகிறது.தவிர, கடந்தாண்டு, விடுதிகளில் சிக்கி தவித்த பலரும், நடப்பாண்டில், இந்நிலை தவிர்க்கவே, முன்னதாக, விடுதிகளை விட்டுசெல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X