ஊரடங்கை மீறினால் வாகனங்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறினால் வாகனங்கள் பறிமுதல்

Added : ஏப் 20, 2021
Share
சென்னை : ''இரவு நேரம் மற்றும் முழு ஊரடங்கை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல்,'' என, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார். இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனாவை கட்டுப்படுத்த, அரசு, இரவு, 10:00 மணியில் இருந்து, அதிகாலை, 4:00 வரையிலும், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.ஊரடங்கு உத்தரவுகளை மீறுவோர் மற்றும் வாகனங்களை இயக்குவோர் மீது, சட்ட

சென்னை : ''இரவு நேரம் மற்றும் முழு ஊரடங்கை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல்,'' என, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனாவை கட்டுப்படுத்த, அரசு, இரவு, 10:00 மணியில் இருந்து, அதிகாலை, 4:00 வரையிலும், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.ஊரடங்கு உத்தரவுகளை மீறுவோர் மற்றும் வாகனங்களை இயக்குவோர் மீது, சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்யப்படும்; வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.திருமண விழாக்களில், 100 பேரும், சவ ஊர்வலத்தில், 50 பேரும் பங்கேற்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை மீறுவோர் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமணங்களுக்கு செல்வோர் அவசியம் பத்திரிகைகளை வைத்திருக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், இரவு, 10:00 மணிக்கு மேல், பொது இடங்களில் இருப்போரிடம் விசாரணை நடத்தி, அவர்கள் உரிய இடத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில், இரவு நேர ஊரடங்கு பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 200 இடங்களில் வாகன சோதனை நடக்கிறது.பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டு, 'ஆம்புலன்ஸ்' உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் அணுகு சாலைகளில் செல்ல அறிவுறுத்தப்படும். பொது மக்கள் அனைவரும் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X