பொது செய்தி

இந்தியா

மரக்கன்றுகளை பராமரிக்க திட்டம்

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், ஐந்து லட்சம் மரக்கன்றுகளை பராமரிக்க, தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், நகரின் சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகளை வளர்ப்பதற்கான திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.மரக்கன்று வளர்ப்பதற்கான விதைகளை வழங்குவது, மரக்கன்றுகளை நடுவது, ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை

பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், ஐந்து லட்சம் மரக்கன்றுகளை பராமரிக்க, தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், நகரின் சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகளை வளர்ப்பதற்கான திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.மரக்கன்று வளர்ப்பதற்கான விதைகளை வழங்குவது, மரக்கன்றுகளை நடுவது, ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை அகற்றுதல், மரங்களை பராமரித்தல் உள்ளிட்டவை இத்திட்டத்தின் செயல்பாடுகள்.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததும், ஒரு முக்கிய காரணம், என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் மூலம், 5 லட்சம் மரக்கன்றுகளை, வெவ்வேறு பண்ணைகளில் பராமரிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இந்த மரக்கன்றுகள், பொது மக்களுக்கு மழைகாலம் வரும் முன், இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன், எட்டு மண்டலங்களில் பணிகள் நடக்கின்றன.மரக்கன்றுகள் வளர்ந்த பின், பொதுமக்களுக்கு வழங்கப்படும். கடந்தாண்டு, மரக்கன்றுகளை பெற்றுச்செல்ல, பொதுமக்கள் முன்வரவில்லை.இதனால், மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பொது இடங்களில், 40 ஆயிரம் மரக்கன்றுகள் நட இருப்பதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய அறிவியல் நிறுவனத்தின் கணக்கெடுப்புபடி, நகரில், பத்து பேருக்கு ஒரு மரம் வீதம் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், ஒருவருக்கு சராசரியாக, ஏழு மரங்கள் வீதம் இருக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.தொடர்ந்து பல சுற்றுச்சூழல் அமைப்பினரும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். மரக்கன்றுகளை வளர்ப்பதிலும், பராமரிப்பதிலும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், துாய்மையான காற்றை சுவாசிக்கவும் மரங்களின் தேவை மனிதர்களுக்கு கட்டாய தேவையாக இருப்பதை உணர வேண்டும்.மரக்கன்று நடுவதற்கான திட்டத்தை பொதுமக்களிடம் மாநகராட்சி நிர்வாகம், கூடுதல் விழிப்புணர்வுடன் கொண்டுசெல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X