பார்வையற்றவர் வீட்டில் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பார்வையற்றவர் வீட்டில் திருட்டு

Added : ஏப் 20, 2021
Share
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையத்தில் பார்வையற்ற பெண்ணின் வீட்டில் புகுந்து, 4000 ரூபாய் திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்டது காளிபாளையம் கிராமம். இங்கு வசிப்பவர் ரங்கநாயகி, 70; கணவனை இழந்தவர்; குழந்தைகள் இல்லை. கண்பார்வையற்ற இவர் ஊரக வேலை உறுதி திட்டத்தில், அவ்வப்போது பணிசெய்து,
 பார்வையற்றவர் வீட்டில் திருட்டு

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையத்தில் பார்வையற்ற பெண்ணின் வீட்டில் புகுந்து, 4000 ரூபாய் திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்டது காளிபாளையம் கிராமம். இங்கு வசிப்பவர் ரங்கநாயகி, 70; கணவனை இழந்தவர்; குழந்தைகள் இல்லை. கண்பார்வையற்ற இவர் ஊரக வேலை உறுதி திட்டத்தில், அவ்வப்போது பணிசெய்து, ஜீவனம் நடத்தி வருகிறார். இவர் சிறுகச் சிறுக சேமித்த பணம் 4,000 ரூபாயை, வீட்டில், பீரோவில் வைத்திருந்தார். சம்பவத்தன்று, ரங்கநாயகி வெளியே சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. வீட்டுக்குள், பீரோவில் இருந்த, 4000 ரூபாய் காணாமல் போயிருந்தது.இதுகுறித்து, தெரிந்தவர்கள் உதவியுடன் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் ரங்கநாயகி புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்த்து, நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். ஏற்கெனவே, ரங்கநாயகியின் வீட்டில் இருந்த மொபைல் போன் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X