மூதாட்டியிடம் செயின் பறிப்பு| Dinamalar

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

Added : ஏப் 20, 2021
Share
பெங்களூரு : மூதாட்டியிடம் செயினை பறித்து தப்பியோடிய நபரை, பொது மக்கள் பிடித்து தாக்கியதில், காயமடைந்த அவர், மருத்துவமனையில் உயிரிழந்தார். பெங்களூரில், வாடகைக்கார் ஓட்டுனராக பணியாற்றிய மகேஷ், 38, பணத்தாசையால் செயின் பறிப்பில் ஈடுபட்டார். இவர் மீது கொலை முயற்சி வழக்கும் உள்ளது. சூதாடிய குற்றத்திற்காக, சூர்யசிட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.மாதநாயகனஹள்ளியில்,

பெங்களூரு : மூதாட்டியிடம் செயினை பறித்து தப்பியோடிய நபரை, பொது மக்கள் பிடித்து தாக்கியதில், காயமடைந்த அவர், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பெங்களூரில், வாடகைக்கார் ஓட்டுனராக பணியாற்றிய மகேஷ், 38, பணத்தாசையால் செயின் பறிப்பில் ஈடுபட்டார். இவர் மீது கொலை முயற்சி வழக்கும் உள்ளது. சூதாடிய குற்றத்திற்காக, சூர்யசிட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.மாதநாயகனஹள்ளியில், ஏப்., 18ல் சாந்தம்மா என்ற மூதாட்டி, தன் இரண்டு பிள்ளைகளுடன், கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது ஸ்கூட்டரில் வந்த மகேஷ், மூதாட்டி கழுத்திலிருந்த தங்கச்செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.இதை கண்ட அப்பகுதியினர், மகேஷை விரட்டி பிடித்து, மனம் போனபடி அடித்து துவைத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த அவர், நிமான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.சம்பவம் தொடர்பாக, ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X