பொது செய்தி

இந்தியா

பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்தால் 'லாக் டவுன்' இல்லை!

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
புதுடில்லி: ''கொரோனாவை கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால், ஊரடங்கு தேவையில்லை. நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி கூறினார்.மேலும், ''மருத்துவமனைகளில், படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன; மருந்துகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு
கட்டுப்பாட்டு, லாக் டவுன்,  பிரதமர் மோடி, கொரோனா, தடுப்பூசி

புதுடில்லி: ''கொரோனாவை கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால், ஊரடங்கு தேவையில்லை. நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி கூறினார்.

மேலும், ''மருத்துவமனைகளில், படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன; மருந்துகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. பொருளாதாரம் பாதிக்காத வகையில், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும்,'' என்றும், துவளும் மக்களுக்கு, பிரதமர் தைரியமூட்டினார்.

நாட்டில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு, 2.5 லட்சத்தை கடந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா சூழல் குறித்தும், வைரஸ் பரவலை தடுப்பது பற்றியும், நாட்டு மக்களிடம், பிரதமர் மோடி, தொலைக்காட்சி வழியாக நேற்று உரையாற்றினார்; அவர் பேசியதாவது: நம் நாடு, இரண்டாவது கொரோனா அலையை சந்தித்து வருகிறது. இதனால், மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும், வலிகளையும் புரிந்து கொண்டுள்ளேன்.

க்கள் நினைத்தால் கொரோனா இரண்டாம் அலையை முறியடிக்க முடியும் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலின் சூழல் குறித்தும் இன்று பிரதமர் மோடி நாட்டுமக்களிடம் உரையாடினார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரபல டாக்டர்களுடன், மருத்து நிபுணர்களுடனும், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடினார்


பலமடங்கு அதிகரிப்பு


கொரோனாவால் தங்களின் நெருக்கமானவர்களை இழந்து நிற்கும் மக்களின் துயரத்தில், நானும் பங்கேற்கிறேன். கொரோனாவுக்கு எதிராக டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என, முன்களப் பணியாளர்கள் பலரும் பாடுபடுகின்றனர். அவர்களுக்கு நாம், உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்த சவாலை எதிர்கொள்வதில், பொறுமையை இழந்துவிடக் கூடாது. நாம் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே, இந்த சவாலில் வெற்றி பெற முடியும். நாட்டின் பல பகுதிகளில், ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகள், தனியார் துறையினர் இணைந்து, ஆக்சிஜனை தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய, தீவிரமாக முயற்சித்து வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்ததை விட, இப்போது மருந்து தயாரிப்பு, பல மடங்கு அதிகரித்துள்ளது.கொரோனாவுக்கு எதிரான போரில்,மருத்துவ சாதனங்கள் தயாரிப்பை,பெரியளவில் செய்துள்ளோம். மருத்துவ உபகரணங்களைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு இருந்த மோசமான சூழ்நிலை, இப்போது இல்லை.விலை குறைவுமருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. பல நகரங்களில், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கவே, தனி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதே, நம் விஞ்ஞானிகள், 24 மணி நேரமும் பாடுபட்டு, தடுப்பூசியை கண்டுபிடித்தனர். இப்போது, நம் நாட்டில் தான், தடுப்பூசி விலை குறைவாக உள்ளது.

கடந்த ஜனவரி, 16 முதல், இப்போது வரை, 12 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும், 1ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நம் சுகாதார ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


முயற்சிஏழைகள், நடுத்தரப் பிரிவினருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் பணி தொடரும். போர்க்கால அடிப்படையில், அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி நடக்கும். நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில், 50 சதவீதம், மாநில அரசுகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், நேரடியாக வழங்கப்பட உள்ளன. அரசு மருத்துவமனைகளில், தடுப்பூசி தொடர்ந்து இலவசமாக போடப்படும். பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில், உயிர்களைக் காக்க வேண்டும் என்பதே, மத்திய அரசின் முயற்சி. கடந்த ஆண்டு இருந்த நிலைமைக்கும், இப்போதுள்ள நிலைமைக்கும், பெரும் வித்தியாசம் உள்ளது.


விழிப்புணர்வுபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள், எங்கு உள்ளனரோ, அங்கேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என, வேண்டுகிறேன். அவர்களது பாதுகாப்புக்கும், வாழ்வாதாரத்துக்கும், நம்பிக்கையளிக்க வேண்டும் என, மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் எந்த நகரத்தில் உள்ளனரோ, அங்கேயே அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். இதனால், அவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாது.கொரோனாவை கட்டுப்படுத்துவதில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வும், பொறுப்பும் அதிகரித்துள்ளது: அது தொடர வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்வதை, முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இயன்றவர்கள், வீட்டிலிருந்து பணி புரியலாம்.முழு ஊரடங்கு சூழல் மீண்டும் வராமல் தடுப்பது, மக்களின் கைகளில் தான் உள்ளது. முழு ஊரடங்கு என்பது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும்.


கடைபிடிப்புகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடத்தை மட்டும் தனிமைப் படுத்துவதன் வாயிலாக, முழு ஊரடங்கைத் தவிர்க்கலாம்.நம்மையும், மற்றவர்களையும் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் முழுமையான கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். நாட்டிற்கு தற்போது தேவை, கூட்டு முயற்சிதான். நாம் தைரியத்துடன் போராட வேண்டும். கடந்த ஆண்டு, நவராத்திரி, தீபாவளி உட்பட பல பண்டிகைகளை, கட்டுப்பாட்டுடன் கொண்டோடினோம். இப்போதும், ராமநவமி, ரம்ஜான் போன்ற பண்டிகைகளை, கட்டுப்பாட்டுடன் கொண்டாடுவோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஏப்-202123:28:13 IST Report Abuse
Pugazh V சங்க சேஷன் - நான் எழுதியதற்கு ஆதாரம் இதே பத்திரிகை யில் இருக்கிறது. முன்னாள் பிரதமர் இன்னாள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம், அதற்கு பிரதமர் பதில் எழுதாமல் அவரது அல்லக்கை ஹர்ஷவர்தன் எழுதி ய பதிலின் தமிழாக்கம் இரண்டு மே இருக்கிறது. நான் ஏன் வேறு யாராவது சொல்லி எழுத வேண்டும்? எனக்கு என்ன தமிழ் தெரியாதா??
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஏப்-202123:25:25 IST Report Abuse
Pugazh V சங்கசேஷன் pm மின் உயையைக் கேட்டு இப்படி எழுதினார் : "ஆக்கபூர்வமா ஒன்னும் சொல்லமாட்டானுங்க பிறரை குத்தம் சொல்லறத்துக்கு முன்பு உன்னோட அழுக்கை தொடச்சுக்கோ பின் உன் அளப்பறையை வச்சுக்கோ". பி எம் தனது உரையில் இப்படி இந்தியில் சொன்னாரா? அடடா...தெரியாமல் போய்விட்டதே
Rate this:
Cancel
Krishnan - Chennai,இந்தியா
21-ஏப்-202122:17:48 IST Report Abuse
Krishnan தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம். People have to make sure that if they get any symptoms, better they should stay at home including everyone in their family. The major challenge with Covid is fast spreading when compared to other virus. I got Covid and recovered without medical attention and the same way more than 90% of the people can get recovered. But the main concern is on that 10% who needs attention and it is hard to predict who fall under 10% as you cannot judge your immune... As long as this 90% of that people make sure that they are not the potential carrier of the virus and stay away from people when they get any symptoms, this is hard to contain. People will realize only if their near and dear falls under that 10% category.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X