பொது செய்தி

தமிழ்நாடு

வழிபாட்டு தலங்களில் மேலும் கட்டுப்பாடு: அரசு ஆலோசனை

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில், வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ள வேண்டிய, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர், நேற்று அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தினமும் அதிகரித்தபடி உள்ளது. இதை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கும்பாபிஷேகம்நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு
வழிபாட்டு தலங்கள், கட்டுப்பாடு, மத தலைவர்கள், ஆலோசனை

சென்னை :தமிழகத்தில், வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ள வேண்டிய, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர், நேற்று அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தினமும் அதிகரித்தபடி உள்ளது. இதை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


கும்பாபிஷேகம்



நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில், இரவு, 10:00 மணி வரை, வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதில், மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, அனைத்து மதத் தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.

தலைமை செயலர் ராஜிவ்ரஞ்சன் தலைமையில் நடந்த கூட்டத்தில், டி.ஜி.பி., திரிபாதி, உள்துறை செயலர் பிரபாகர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலர் செந்தில்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஹிந்து, கிறிஸ்துவ, முஸ்லிம், ஜெயின், சீக்கிய மதத் தலைவர்களும் பங்கேற்றனர். கிறிஸ்துவ மதத் தலைவர்கள் பேசுகையில், 'ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம், பிரார்த்தனை கூட்டம் நடத்த, அனுமதி அளிக்க வேண்டும்' என்றனர்.முஸ்லிம் மதத் தலைவர்கள், 'ரமலான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை, மே, 9 ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்று ஊரடங்கு தளர்வு அளிக்க வேண்டும்' என,
வலியுறுத்தி உள்ளனர்.


ஒத்துழைப்பு



ஒட்டுமொத்தமாக, அனைத்து மதத் தலைவர்களும், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அரசு சில கட்டுப்பாடுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கூட்டம் குறித்து, இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் கூறியதாவது:அரசு விதிக்கும் நடைமுறைகளுக்கு, முஸ்லிம் சமுதாயம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என, உறுதி அளித்து
உள்ளோம். ரமலான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை, ஞாயிற்றுக்கிழமை வருவதால், அரசு அனுமதி அளித்தால், அன்று தொழுகை நடத்துவோம். இல்லையேல், ஒரு நாள் முன், பின் நடத்துவது குறித்து, ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஏப்-202117:48:38 IST Report Abuse
ஆப்பு தொழுகையை வீட்டில் செய்தால் இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டாரா? அவருக்கு எல்லோரும் சேர்ந்துதான் தொழுகை நடத்தணும்னா கொரோனாவை இல்லாமல் செய்ய மாட்டாரா? இதே கேள்விதான் அனைத்து மதத்தினருக்கும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஏப்-202117:43:02 IST Report Abuse
Endrum Indian இது இந்த மத சார்பற்ற இந்து மத இன்டோலோரன்ட் நாடு ஆகவே இந்து மத கோவிலுக்கு மட்டுமே இந்த தடை மசூதி சர்ச்சுகளுக்கு அல்லவே அல்ல
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
21-ஏப்-202100:42:52 IST Report Abuse
அன்பு அத்துணை வழிபாட்டு நிலையங்களுக்கும் தாழ்பாள் போடுங்கள். இல்லையெனில் மக்கள் இறைவனை தரிசித்தபின், எமனிடம் சென்றுவிடுவார்கள்.
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
21-ஏப்-202113:46:23 IST Report Abuse
Dr. Suriyaஎமனும் ஒரு இறைவன்தான் இந்துக்களுக்கு......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X