அபராத முறை ரத்து வணிகர்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அபராத முறை ரத்து வணிகர்கள் கோரிக்கை

Added : ஏப் 20, 2021
Share
சென்னை:'வணிக நிறுவனங்களில், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமல் வந்தால், நிறுவன உரிமையாளரிடம், அபராதம் வசூலிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.சங்க நிர்வாகிகள், தலைமை செயலர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு: வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமல் வந்தால், நிறுவன உரிமையாளரிடம் அபராதம்

சென்னை:'வணிக நிறுவனங்களில், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமல் வந்தால், நிறுவன உரிமையாளரிடம், அபராதம் வசூலிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சங்க நிர்வாகிகள், தலைமை செயலர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு: வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமல் வந்தால், நிறுவன உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை, ரத்து செய்ய வேண்டும். வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகளில், சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி, கொரோனா பரிசோதனை செய்வதுடன், தடுப்பூசி போட வேண்டும்.

கோயம்பேடு சந்தை மற்றும் மாநிலம் முழுதும், காய்கறி அங்காடிகளில், சில்லரை வணிகத்தை தடை செய்யும் முடிவை, மறு பரிசீலனை செய்து, கட்டுப்பாடுகளுடன் வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X