பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்துாரில் கொரோனா பரவுகிறது

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் நகரில் பல தெருக்களில் கொரோனா பாதிப்புள்ளவர்கள் 8 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். காளியம்மன் கோயில் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தென்மாப்பட்டு, தம்பிபட்டி, வலையல்காரத் தெரு, சின்னத்தோப்பு தெரு என்று ஆங்காங்கே பாதிப்புள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது திருப்புத்துார் ஒன்றியத்தில் 16 பேருக்கு

திருப்புத்துார் : திருப்புத்துார் நகரில் பல தெருக்களில் கொரோனா பாதிப்புள்ளவர்கள் 8 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

காளியம்மன் கோயில் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தென்மாப்பட்டு, தம்பிபட்டி, வலையல்காரத் தெரு, சின்னத்தோப்பு தெரு என்று ஆங்காங்கே பாதிப்புள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். தற்போது திருப்புத்துார் ஒன்றியத்தில் 16 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அதில் 8 பேர் திருப்புத்துார் நகரில் உள்ளவர்கள். வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார்கூறுகையில், 'நகரில் ஆங்காங்கே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டுமே அரசு மருத்துவமனையில் நடந்த சோதனையில் 9 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

நகரில் பாதிப்பு ஆங்காங்கே உள்ளதால் மக்கள் முகக்கவசம், கை கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டியது அவசியம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X