பதிவு அலுவலகங்களில் அமலாகுது கட்டுப்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு அலுவலகங்களில் அமலாகுது கட்டுப்பாடு

Added : ஏப் 20, 2021
Share
சென்னை:சார் - பதிவாளர் அலுவலகங்களில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், கடந்த ஆண்டு கொரோனா பரவல்அதிகமாக இருந்தபோதும், சார் -- பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டன.கொரோனா பரவலை தடுக்க, சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.கொரோனா பரவல்குறைந்த நிலையில், பெரும்பாலான அலுவலகங்களில்,

சென்னை:சார் - பதிவாளர் அலுவலகங்களில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கடந்த ஆண்டு கொரோனா பரவல்அதிகமாக இருந்தபோதும், சார் -- பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டன.கொரோனா பரவலை தடுக்க, சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.கொரோனா பரவல்குறைந்த நிலையில், பெரும்பாலான அலுவலகங்களில், இந்நடைமுறைகளை கடைப்பிடிப்பது குறைந்தது.

தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.இது குறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும், வாசலில் கைகழுவ அல்லது கிருமி நாசினி பயன்படுத்த வசதி செய்ய வேண்டும். உள்ளே வரும் அனைவருக்கும், உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒரு சமயத்தில், ஒரு பத்திரம் தொடர்பான நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். டோக்கன் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான், பொது மக்கள் உள்ளே வர வேண்டும்.சுகாதாரத் துறையின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, அனைவரும் முக கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவசிய பணி இல்லாத, வேறு காரணங்களுக்காக யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது.

சார் - பதிவாளர்கள் மற்றும் பணியாளர்கள் கையுறை பயன்படுத்த வேண்டும்.கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அலுவலகங்கள், கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வரும் பணியாளர்களுக்கும், சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.அத்துடன் எந்தெந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது தொடர்பான, வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X