பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி, பழங்கள் கொள்முதல் விவசாயிகளுக்கு உதவ உத்தரவு

Added : ஏப் 20, 2021
Share
Advertisement
சென்னை:'விவசாயிகளிடம் காய்கறிகள் மற்றும் பழங்கள் கொள்முதலில், எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது' என, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தின் பல மாவட்டங்களில், காய்கறிகள், கீரை வகைகள், வாசனை பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில், காலை முதல் மாலை வரை அறுவடை செய்யப்படும் காய்கறிகள்,

சென்னை:'விவசாயிகளிடம் காய்கறிகள் மற்றும் பழங்கள் கொள்முதலில், எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது' என, தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில், காய்கறிகள், கீரை வகைகள், வாசனை பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில், காலை முதல் மாலை வரை அறுவடை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், மூட்டைகளில் அடைக்கப்பட்டு, சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகின்றன.

இவை, அதிகாலை நேரங்களில் மார்க்கெட்டுகளை வந்து அடைகின்றன.கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் இரவு, 10:00 முதல் அதிகாலை, 4:00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால், காய்கறிகள், பழங்களை வழக்கம் போல அனுப்ப முடியுமா என்ற சந்தேகம், விவசாயிகள், கமிஷன் ஏஜன்டுகள், வியாபாரிகளுக்கு எழுந்தது.

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடியை சந்தித்து முறையிட்டனர்.இதையடுத்து, விவசாயிகளிடம் காய்கறிகள், மற்றும் பழங்கள் கொள்முதலில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வியாபாரிகளுக்கு உதவும்படி, வேளாண் துறை செயலர், தோட்டக்கலைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X