கோவில் சொத்து பட்டியல் தராதவர்களை தண்டிக்க மாஜி அமைச்சர் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில் சொத்து பட்டியல் தராதவர்களை தண்டிக்க 'மாஜி' அமைச்சர் வலியுறுத்தல்

Added : ஏப் 21, 2021
Share
சென்னை:'கோவில்களின் சொத்து பட்டியல் தர மறுப்பவர்களை, தண்டிக்க வேண்டும்' என, அறநிலையத் துறை முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள மனு:வேலியே பயிரை மேய்வது போல, கோவை பேரூர் கோவில், தஞ்சை பெரிய கோவில், பழநி முருகன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் என, எந்த கோவில்களுக்கும், பரம்பரை அறங்காவலர் குழு

சென்னை:'கோவில்களின் சொத்து பட்டியல் தர மறுப்பவர்களை, தண்டிக்க வேண்டும்' என, அறநிலையத் துறை முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள மனு:வேலியே பயிரை மேய்வது போல, கோவை பேரூர் கோவில், தஞ்சை பெரிய கோவில், பழநி முருகன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் என, எந்த கோவில்களுக்கும், பரம்பரை அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை.குழுவில், மூன்று பேர் முதல் ஒன்பது பேர் வரை நியமிக்கலாம். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆணோ, பெண்ணோ நியமிக்கப்பட வேண்டும் என்ற, விதி இருந்தும் செயல்படுத்தவில்லை.

சென்னை உயர் நீதிமன்றம், அறங்காவலர் குழுக்கள் நியமிக்க வற்புறுத்தியும், வீண் காலதாமதம் செய்யப்படுகிறது.அறநிலையத்துறை கமிஷனர், செயலர், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை, வேலை வாங்க முடியாமல் இருக்கின்றனரா அல்லது ஊழலுக்கு துணை போகின்றனா என்று தெரியவில்லை.

நான் எம்.ஜி.ஆர்., ஆட்சியில், அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது, 8 கிலோ தங்கத்தில், திருச்செந்துார் முருகனுக்கு தங்க கவசம் செய்யப்பட்டது. அது இருக்கிறதா; இல்லையாஎன்று நான் கேட்டதற்கு, மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பதில் இல்லை.கடலுார் மாவட்டம், சிதம்பரம் டவுன் கீழ் தெரு மாரியம்மன் கோவில், வடக்கு புறம் கோவில் நிலத்தில், இரண்டு அடுக்கு மாடியில், 24 கடைகள் கட்டப்பட்டு, கோவிலுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் வருமானத்தை, தனியார் அனுபவிக்கின்றனர்.

மேலும், கோவில் பெயரில் இருந்த பட்டாவை, சொந்த பட்டாவாக மாற்றி விட்டனர். இதற்கு வருவாய் துறை உடந்தை, இது குறித்து புகார் செய்து, அதுவும் விசாரணையில் உள்ளது. முதல்வர் தனக்கு நம்பிக்கை உள்ள, நல்ல அதிகாரியை அனுப்பி விசாரிக்கலாம். கோவில் சொத்து பட்டியலை தர மறுப்பவர்களை தண்டிக்க வேண்டும்.முதலில் மாற்ற வேண்டும்; அதிகாரம் இருக்கும்போது, சமூக நீதி வழங்க மறுப்பவர்களை, பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயரில் விருது வழங்க வேண்டும் என, முதல்வர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு பதில் அனுப்பிய, தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர், இது, அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது எனக்கூறி நிராகரித்துள்ளார். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X