பொது செய்தி

தமிழ்நாடு

பாவேந்தரை பல்லக்கில் சுமந்த பதிப்பாளர்

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
'நாமோ ஆன்மிக குடும்பத்தை சேர்ந்தவர்கள். பாரதிதாசனோ இறை மறுப்பாளர். அப்படி இருக்கையில், நீ எப்படி ஒரு நாத்திகரை உயர்த்திப் பிடிக்கப் போயிற்று' என்ற எதிர்ப்பை மீறி, பாவேந்தர் பாரதிதாசனை உயர்த்திப் பிடித்த பதிப்பாளர் தான் முல்லை முத்தையா. பாவேந்தரின் நுால்களை வெளியிடுவதற்கென்றே, சென்னை பிராட்வேயில், ௧௯௪௪ல், முல்லை பதிப்பகத்தை ஆரம்பித்தவர் இவர்.பாவேந்தரின்,
 பாவேந்தர், பல்லக்கு, பதிப்பாளர்,லேனா தமிழ்வாணன்

'நாமோ ஆன்மிக குடும்பத்தை சேர்ந்தவர்கள். பாரதிதாசனோ இறை மறுப்பாளர். அப்படி இருக்கையில், நீ எப்படி ஒரு நாத்திகரை உயர்த்திப் பிடிக்கப் போயிற்று' என்ற எதிர்ப்பை மீறி, பாவேந்தர் பாரதிதாசனை உயர்த்திப் பிடித்த பதிப்பாளர் தான் முல்லை முத்தையா.

பாவேந்தரின் நுால்களை வெளியிடுவதற்கென்றே, சென்னை பிராட்வேயில், ௧௯௪௪ல், முல்லை பதிப்பகத்தை ஆரம்பித்தவர் இவர்.பாவேந்தரின், 'அழகின் சிரிப்பு, நல்ல தீர்ப்பு, காதல் நினைவுகள், அமைதி, பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு, தமிழியக்கம், இருண்ட வீடு' போன்ற நுால்கள் எல்லாம், முத்தையாவால் பதிப்பிக்கப் பெற்றவையே.தேவகோட்டையில் பிறந்த முத்தையா, தன் குலத் தொழிலான கொடுக்கல் வாங்கலை கவனிக்க, பர்மாவில் வசித்து வந்த காலம் அது.
இக்காலக் கட்டத்தில் பாவேந்தரின் கவிதை ஒன்றை படித்த முல்லை முத்தையா, 'இவரல்லவோ கவிஞர்' என வியந்து, தமிழகம் சென்றால், முதல் வேலை பாரதிதாசனை பார்ப்பது தான் என்ற, முடிவுக்கு வந்தார்.ஒரு திரை ரசிகன், தன் மனதில் வரித்துக் கொண்ட, ஒரு கதாநாயகனை எப்படி பார்க்கத் துடிப்பானோ, அதற்கு இணையான ஆர்வத்தை கொண்டிருந்தார் முத்தையா. அப்போது, அவருக்கு வயது, 20.


கடந்த, 1943ல், இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில், பர்மாவை கடுமையாக தாக்கியது, ஜப்பான். அத்துடன், உள்நாட்டு குழப்பமும் சேர்ந்து கொள்ள, சென்னை திரும்புவதற்காக, பர்மாவை விட்டு வெளியேறி, நடந்தே இந்தியாவுக்கு வந்த தமிழர்களில் முத்தையாவும் ஒருவர்.
அப்போது, ராயபுரம் வை.கோவிந்தன், பதிப்பாளராக, பத்திரிகையாளராக சக்தி காரியாலயத்தை, அதாவது, தற்போதைய 'மியூசிக் அகாடமி'யை நடத்தி வந்தார்.
சக்தி ஆசிரியர் குழுவில் இணைந்து கொண்ட முல்லை முத்தையாவுக்கு, புதுச்சேரியில் வாழ்ந்த பாரதிதாசனை, எப்போது காணப் போகிறோமோ என்ற, ஆர்வம் மிகுந்து கொண்டே இருந்தது.சென்னை சாந்தோமில் உள்ள இயல், இசை, நாடக மன்றத்தில், பாரதிதாசன் தங்கியிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட முத்தையா, இரு நண்பர்களுடன் சென்று அவரை சந்தித்தார். இது, ஒரு மகத்தான ஆரம்பம் என்று, இருவருமே எண்ணியிருக்க மாட்டார்கள். அதன்பின், தன் நுால்களைப் பதிப்பிக்கும் உரிமையை, முத்தையாவுக்கே வழங்கினார் பாரதிதாசன். முத்தையாவும், பாரதிதாசனின் புத்தகங்களை, கலைநயத்துடன் பதிப்பித்து, அந்த கவிஞரின் மனதை பூரிக்கச் செய்தார்.

புரட்சிக் கவிஞரான பாரதிதாசனின் கவிதைகளை பதிப்பித்ததோடு நில்லாமல், திராவிட இயக்க ஈடுபாடு இல்லாத தமிழறிஞர்களிடம் இருந்தும், அவருக்கான வாழ்த்து செய்திகளையும், அவரைப் பற்றிய கட்டுரைகளையும் கேட்டுப் பெற்று, தனி நுால் ஒன்றையும் வெளிக்கொணர்ந்தார், முத்தையா. அண்ணாதுரை, 'திராவிட நாடு' இதழில் எழுதிய, 'அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்' என்ற கட்டுரை, பாரதிதாசனை பற்றி, புதுமைப்பித்தன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் ஆகியவை, இப்பதிப்பில் சேர்க்கப்பட்டதால், பாரதிதாசனின் மதிப்பு மிகவும் உயர்ந்து நின்றது.
ஒரு காலக்கட்டத்தில், 'பாரதிக்கு பின், நல்ல கவிஞனே இல்லை' என, சோமசுந்தர பாரதியார் ஒரு மேடையில் பேச, 'பாரதிதாசனை மறந்து விட்டீர்களே' என்று, முத்தையா ஒரு கடிதம் எழுதி, கவிஞரின் சில படைப்புகளையும் இணைத்து அனுப்ப, ஒரு அருமையான பதில்
கடிதத்தை, ௧௯௪௬ பிப்ரவரி, ௧௮ல், முத்தையாவுக்கு எழுதினார் சோமசுந்தர பாரதி.

அதில், 'இதுவரை பாரதிதாசனின் கவிதைகளை படித்து, மகிழாமைக்கு வருந்துகிறேன். எல்லாம் நல்லனவாயினும், 'அழகின் சிரிப்பு' என்னை அவருக்கு ஆளாக்கி விட்டது' என, பெருந்தன்மையோடு குறிப்பிட்டிருந்தார். செல்லுமிடம் எல்லாம், பாரதிதாசனின் புகழை பரப்புவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார் முத்தையா. 'கடவுள் இல்லை என்றும், பிராமணர்களை கண்டித்து பேசியும், எழுதியும் வருகிற பாரதிதாசனுக்கு, இவ்வளவு ஆதரவு தரலாமா' என்ற கேள்விகள் எழுந்த காலக்கட்டத்திலும், முத்தையா காட்டிய உறுதி அபாரமானது.


முத்தையா தொகுத்த, 'புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்' என்ற நுால் தான், உயர்நிலை பெருமக்களை பற்றிய தொகுப்பு நுால்களுள் முன்னோடி. 'இதை தொடர்ந்தே ஈ.வெ.ரா., அண்ணாதுரை, காமராஜர், ம.பொ.சி., ஆகியோரை பற்றிய தொகுப்பு நுால்கள் வெளிவர ஆரம்பித்தன என்றும், பயண இலக்கிய அறிஞர் சோமலெ, தன், 'வளரும் தமிழ்' என்ற நுாலில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

பாரதிதாசனும் தன்னைப் பற்றிய தொகுப்பு நுாலால், மிகவும் மகிழ்ந்தார். 'யார் இந்த பாரதிதாசன் என்று எவராவது கேட்டால், 'புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்' என்ற, இந்நுாலை அவர்களிடம் கொடுங்கள்' என, பாரதிதாசன் சொன்னதாக தியாகி ராம.அண்ணாமலை, தன் நுால் ஒன்றில்
குறிப்பிட்டுள்ளார். பாரதிதாசன் வசித்து வந்த வாடகை வீட்டை, வீட்டின் உரிமையாளர் விற்க முயன்ற போது, அந்த வீட்டை விலை பேசுங்கள், நாம் வாங்கிவிடலாம் என ஊக்கம் அளித்து, 4,௦௦௦ ரூபாய் கொடுத்து, வீட்டை வாங்கியும் கொடுத்தவர் முத்தையா.அவரின் முயற்சியால், நிதி திரட்டப்பட்டு, 1946 ஜூலை, 26 ல், சோமசுந்தர பாரதியார் தலைமையில், சென்னையில் விழா நடத்தப்பட்டு, அதில், பாரதிதாசனுக்கு, 25 ஆயிரம் ரூபாய் பண முடிப்பும் வழங்கப்பட்டது.

புகழ், பெருமை, பொருளாதாரம் என, அனைத்து விஷயங்களிலும், பாரதிதாசனுக்கு பெரும் துணையாக நின்றவர் முல்லை முத்தையா.ஒரு கவிஞருக்கும், ஒரு பதிப்பாளருக்கும் இடையிலான உன்னத உறவுக்கு உதாரணம் காட்ட வேண்டுமென்றால், எந்த ஓர் உதாரணத்தையும், பாரதிதாசனுக்கும், முல்லை முத்தையாவுக்கும் இடையிலான உறவுக்கு அடுத்ததாகத் தான் தேர்ந்தெடுக்க முடியும்.

-லேனா தமிழ்வாணன்

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
21-ஏப்-202119:01:44 IST Report Abuse
Vijay D Ratnam புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஒரு கடவுள் மறுப்பாளர். அதாவது வழக்கம் போல ஹிந்து கடவுள் மறுப்பாளர். 1959 ஆம் ஆண்டுவரை இருந்த திருவள்ளுவர் படத்தில் நெற்றி நிறைய இருந்த விபூதி, குங்குமம், கழுத்தில் ருத்ராட்ச மாலை, பூணூல் அணிந்து காவியுடையுடன் இருந்த படத்தை சில மாற்றங்கள் செய்து வெளியிட காரணமாக இருந்தவர் பாரதிதாசன். பள்ளிப் பாடப் புத்தகங்களில், அரசுப் பேருந்துகளில், அரசு அலுவலகங்களில், நீதிமன்றங்களில்... என பல இடங்களிலும், நாம் பார்த்துப் பழகிய மார்பு வரை நீண்ட வெண்தாடியோடு, ஒரு கையில் எழுத்தாணியையும், மறு கையில் பனை ஓலையையும் பிடித்தபடி அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் ஓவியத்தை 1959 ஆம் ஆண்டு வரைந்தவர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா. அவர் 1959 க்கு முன்பிருந்த ஓவியத்தை ஒற்றியே படத்தை வரைந்து முடித்து இருந்தார். அதில் சில மாற்றங்கள் செய்து வெளியிட மெனக்கெட்டவர் என்றால் ஈ.வே.ரா, அண்ணா போன்ற ஹிந்து கடவுள் மறுப்பாளர்களுடன் நெருக்கமாக இருந்த பாரதிதாசன். அவரது ஆலோசனையின் பேரில்தான் திருவள்ளுவர் நெற்றியில் இருந்த விபூதி குங்குமம் அழிக்கப்பட்டது, ருத்ராட்ஷ மாலை கழட்டப்பட்டது, பூணூல் அறுக்கப்பட்டது, காவியுடை வெள்ளையுடை ஆக்கப்பட்டது. இந்த பொறச்சிய படைத்தவர் கனகசபை முதலியார் மவன் சுப்புரத்தினம். அதாங்க புரட்சி கவிஞர்பாரதிதாசன்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-ஏப்-202115:34:10 IST Report Abuse
sankaseshan ஆரூர் உங்களுக்கு குயில் கதை நியாபகம்யிருக்கிறது . அண்ணாவும் தம்பிகளும் தொண்டர்களுக்கு அல்வா கொடுப்பதில் வல்லவர்கள்
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
21-ஏப்-202114:26:51 IST Report Abuse
vns போதும் இந்த பெயரளவில் பேச்சளவில் தமிழ் பக்தி. தமிழ் கற்றுக்கொடுக்க தமிழ் வளர ஒரு தமிழனும் முயற்சிப்பதில்லை. உபயோகமில்லாத கட்டுரை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X