பொது செய்தி

தமிழ்நாடு

பருத்தி ஏல வர்த்தகம்; விவசாயிக்கு அழைப்பு

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி, புதுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், முதன் முறையாக, நேற்று பருத்தி ஏலம் நடத்தப்பட்டது.மொத்தம், 14 மூட்டை பருத்தி ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதிகபட்ச விலையாக, ஆர்.சி.எச்., ரகத்துக்கு, குவின்டாலுக்கு, 7,100 ரூபாய் கிடைத்தது. மொத்தம், 29 ஆயிரத்து 750 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.ஏலம் குறித்து, மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் வெங்கு

அவிநாசி:அவிநாசி, புதுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், முதன் முறையாக, நேற்று பருத்தி ஏலம் நடத்தப்பட்டது.மொத்தம், 14 மூட்டை பருத்தி ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதிகபட்ச விலையாக, ஆர்.சி.எச்., ரகத்துக்கு, குவின்டாலுக்கு, 7,100 ரூபாய் கிடைத்தது. மொத்தம், 29 ஆயிரத்து 750 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.ஏலம் குறித்து, மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் வெங்கு மணிமாறன் கூறுகையில், "பிரதி வாரம் செவ்வாய் தோறும் பருத்தி ஏலம் நடக்கும். விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்று, பயன்பெற வேண்டும். தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும்," என்றார்.மையத்தில், ஏல விற்பனைக்கான ஏற்பாடுகளை, திருப்பூர் விற்பனைக்குழு செயலாளர் பாலசந்திரன், அவிநாசி விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அர்ச்சுணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அழகிரி, சாந்தலிங்கம் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X