பொது செய்தி

தமிழ்நாடு

5 மாவட்டத்தில் இன்று சூறைக்காற்று

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
சென்னை:'ஐந்து மாவட்டங்களில், இன்று சூறைக்காற்று வீசும்; 13 மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, திருப்பூர்,

சென்னை:'ஐந்து மாவட்டங்களில், இன்று சூறைக்காற்று வீசும்; 13 மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, மதுரை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும், வறண்ட வானிலை நிலவும்.

சென்னையில் அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில், இன்று இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை உயரும். தமிழகம், புதுச்சேரியில் காற்றில் ஈரப்பதம், 80 சதவீதம் வரை இருக்கும். எனவே, பிற்பகல் முதல் காலை வரையில் வெப்பமாக இருக்கும். இயல்புக்கு மாறாக வியர்க்கும். எனவே, தேவைக்கேற்ப நீர்ச்சத்து மிகுந்த உணவு, பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X