பொது செய்தி

தமிழ்நாடு

வார விடுப்பில் மாற்றம் : தொழிலாளர் அதிருப்தி 

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
திருப்பூர்:'வாரத்தில் இனி நான்கு நாள் பணிபுரிவோருக்கு மட்டுமே வார விடுப்பு வழங்கப்படும்,' என்ற போக்குவரத்து கழகத்தின் அறிவிப்பால், தொழிலாளர் அதிருப்தி அடைந்துள்ளனர்.அரசு போக்குவரத்து கழக டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்டோர் வாரத்தின் மூன்று நாட்கள் பணிபுரிந்தால், அந்த வாரத்துக்குரிய வாரவிடுப்பு எடுத்து கொள்ளலாம். பொது மற்றும் தேசிய விடுமுறை

திருப்பூர்:'வாரத்தில் இனி நான்கு நாள் பணிபுரிவோருக்கு மட்டுமே வார விடுப்பு வழங்கப்படும்,' என்ற போக்குவரத்து கழகத்தின் அறிவிப்பால், தொழிலாளர் அதிருப்தி அடைந்துள்ளனர்.அரசு போக்குவரத்து கழக டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்டோர் வாரத்தின் மூன்று நாட்கள் பணிபுரிந்தால், அந்த வாரத்துக்குரிய வாரவிடுப்பு எடுத்து கொள்ளலாம். பொது மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் பணிக்கு வருவோருக்கு மாற்று விடுப்பு ஒரு நாள் வழங்கப்படும்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இவ்விதிகளில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். அவ்வகையில், இனி வாரத்தில் நான்கு நாட்கள் பணிபுரிவோர் மட்டுமே வார விடுப்பு எடுக்க முடியும். தொழிலாளர் வாரவிடுமுறை நாட்களில் தேசிய விடுமுறை வந்தால் அது ஓய்வு நாளாக கருதப்படும்.அந்நாளில் பணிபுரிந்தாலும் மாற்று விடுப்பு கிடையாது என சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று, அந்தந்த 'டிப்போ' முன் டிரைவர், நடத்துனர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட பொது செயலாளர் (ஏ.ஐ.டி.யு.சி.,) சண்முகம் கூறுகையில், ''கடந்த, 1998 முதல் உள்ள வார விடுப்பு விதிகளில் திடீர் மாற்றம் செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதிஅமலில் உள்ள நிலையில், தொழிற்சங்கத்தினருடன் ஆலோசிக்காமல், இம்முடிவை எடுத்துள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X