பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் விபரம்

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: 'தமிழகத்தில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில், எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம்' என, அரசு விளக்கம் அளித்துள்ளது.இதுதொடர்பான அரசின் செய்திக் குறிப்பு: இரவு நேர பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது, கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் விபரம்: * தொலைத் தொடர்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள்* தகவல்
 ஊரடங்கு, அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் விபரம்

சென்னை: 'தமிழகத்தில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில், எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம்' என, அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பான அரசின் செய்திக் குறிப்பு:

இரவு நேர பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது, கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள்
விபரம்:

* தொலைத் தொடர்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள்

* தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் பணியாளர்கள், இரவு நேர பணி அமர்வுக்கு, அலுவலகத்திலிருந்து செயல்படலாம்
* மருத்துவம், நிதி, போக்குவரத்து மற்றும் பிற முக்கியமான சேவைகளின் பின்தள செயல்பாடுகளை ஆதரிக்க, தரவு மையங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள்

* பொருட்களை ஏற்றுதல், இறக்குதல், சேமித்தல் உள்ளிட்ட கிடங்கு நடவடிக்கைகள்
* விலக்கு அளிக்கப்படாத, பிற தொழிற்சாலைகளை பொறுத்தவரையில், தீ பாதுகாப்பு, இயந்திர பாதுகாப்பு, தொழிலாளர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக, தேவையான அத்தியாவசிய பராமரிப்பு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்
அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் விபரம்:


* மருந்துகள், மருந்துருவாக்கிகள், துப்புரவு பொருட்கள், ஆக்சிஜன், மருத்துவ சாதனங்கள், மருத்துவம், ஜவுளி ஆகியவற்றின் மூலப்பொருட்களுக்கான கூறுகள் மற்றும் அவற்றின் இடைநிலைகள் ஆகியவற்றுக்கான உற்பத்தி நிறுவனங்கள்
* கோழிகள், செல்லப்பிராணிகள் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் உணவு தொடர்பான, உணவு பதப்படுத்தும் தொழில்கள்
* உரங்கள், விவசாய இயந்திர உற்பத்தி நிறுவனங்கள்
* அனைத்து ஏற்றுமதி தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அத்தகைய தொழில்களுக்கு உள்ளீடுகளை உற்பத்தி செய்யும், துணை நிறுவனங்கள்
* பாதுகாப்புத் துறைக்கு உபகரணங்கள் உற்பத்தி செய்யும் ஆலைகள்
* பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் சுகாதாரத் துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி ஆலைகள்.
தொடர் செய்முறை தொழிற்சாலைகள்:* சுத்திகரிப்பு நிலையங்கள், பெரிய எக்கு ஆலைகள், சிமென்ட் ஆலைகள், சர்க்கரை ஆலைகள், உரங்கள், மிதவை கண்ணாடி ஆலைகள், டயர், காகித ஆலைகள், வேதியியல் தொழிற்சாலைகள்.
மொபைல் போன்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு தயாரிப்பு ஆலைகள், பெயின்ட் கடைகள், ஆட்டோ மொபைல் உற்பத்தி ஆலைகள், ஜவுளி தொழிற்சாலைகள்.
அனைத்து தொழிற்சாலைகளிலும், போக்குவரத்து மற்றும் உணவு உண்ணும் போது, போதுமான சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
முக கவசங்கள் அணிய வேண்டும். தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்.இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
21-ஏப்-202120:01:29 IST Report Abuse
sankaseshan டிராவிசங்களின் சாராய ஆலைகளுக்கு அனுமதி இல்லையா ? . தமிழர்களை வஞ்சிக்கிறது மோடி அரசு . இவண் சுடலை ஆகிய கட்டுமரத்தி ன் மகன் .
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-ஏப்-202112:27:52 IST Report Abuse
sankaseshan இதைத்தான் PM சொன்னாரு கூடுமானவரை லாக் டவ்னை தவிர்க்க வேண்டும் .
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஏப்-202109:18:01 IST Report Abuse
Girija மிடாஸ் போன்ற மதுபான ஆலைகளுக்கு அவசரம் முன்னுரிமை அளிக்கப்பட்டு வரிவிலக்கு தரப்படும் . இதற்கான குளறுபடி ஆணை பதினொன்கீழ் கணக்கில் ................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X