கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
சென்னை:'ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல், கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும், தரமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. 'ஆறுகளில் கழிவுகளை வெளியேற்றுவதை தடுக்க, பரிந்துரைகள் அளிக்க, நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கரூரை சேர்ந்த வழக்கறிஞர் தனசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனு:கருப்பம்பாளையம் கிராமத்தில்

சென்னை:'ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல், கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும், தரமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. 'ஆறுகளில் கழிவுகளை வெளியேற்றுவதை தடுக்க, பரிந்துரைகள் அளிக்க, நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரை சேர்ந்த வழக்கறிஞர் தனசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனு:கருப்பம்பாளையம் கிராமத்தில் இயங்கும் சாயப்பட்டறை விரிவாக்கத்துக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியது. தவறான தகவல் அளித்து, சாதகமான அறிக்கை, உத்தரவுகளை அரசிடம் இருந்து, அந்த நிறுவனம் பெற்றது.

சாயப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவால், அமராவதி ஆறு மாசு அடைகிறது.ஆற்றுக்கும், சாயப்பட்டறைக்கும் இடையேயான துாரத்தை அளக்கவும், வெளியேற்றும் கழிவு நீரை அளக்கவும் உத்தரவிட வேண்டும். சாயப்பட்டறைக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, ''அமராவதி ஆற்று நீர் தற்போது குடிப்பதற்கு உகந்ததாக இல்லை; சாயப்பட்டறைகளின் கழிவுநீர் கலக்கிறது. விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியவில்லை,'' என்றார்.

அரசு தரப்பில், கூடுதல் பிளீடர் பிரபு ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்வதாக கூறினார். அதற்கு, தலைமை நீதிபதி, 'முதலில் நாம் அந்த இடத்துக்கு சென்று, தண்ணீரை குடித்து பார்க்கலாம்; வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு, தொழிற்சாலைகள் தேவை தான். அதற்காக, உயிருக்கு ஆபத்தாக இருக்கக் கூடாது' என்றார்.

சாயப்பட்டறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கழிவு நீரை வெளியேற்றுவதில்லை என்றார். ஆற்று நீர் மாசு ஏற்பட என்ன காரணம்; அந்தப் பகுதி மக்கள், கழிவுகளை கொட்டுகின்றனரா; தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றுகிறதா என்பதை, அறிய வேண்டும் என, தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:ஆற்று நீர் மாசுபடக் கூடாது. ஆறுகளில், தொழிற்சாலைகள் கழிவுநீர் வெளியேற்றுவதையும், உள்ளூர்வாசிகள் கழிவுகளை கொட்டுவதையும் தடுப்பதை, உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை; அப்போது தான், கடைக்கோடி மக்களுக்கும் தரமான நீர் கிடைக்கும்.மாசுபடும் ஆற்று நீரால், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.ஆற்று நீரையும், அணை நீரையும் சார்ந்து இருக்கும் இந்த மாநிலத்தில், தரமான நீர் கிடைப்பதை உறுதி செய்வதில், எந்த சமரசமும் இருக்கக் கூடாது. எனவே, இந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய குழுவை, அரசு நியமிக்க வேண்டும்.

தமிழகம் முழுதும் ஆறுகளில் கழிவுகளை வெளியேற்றுவதை தடுப்பது குறித்தும், ஆறுகளின் அருகில் உள்ள அத்தகைய தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது குறித்தும், உரிய வழிமுறைகளை இந்தக் குழு வழங்க வேண்டும்.இந்தப் பிரச்னையை அரசு தீவிரமாக கருதி, ஆற்று நீரின் தரத்தை பாதுகாப்பதில் முனைப்பு காட்ட வேண்டும்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

விசாரணையை, ஜூன் மூன்றாம் வாரத்துக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.வழக்கு விசாரணையின் போது, படகு இயக்கப்பட்ட கூவம் ஆற்றில்,தற்போது துர்நாற்றம் வீசுவதாக, வழக்கறிஞர் ராகவாச்சாரி குறிப்பிட்டார். உடனே தலைமை நீதிபதி, நேப்பியர் பாலத்தின் மீது, ஏ.சி., காரில் வரும் போது கூட, துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X