சனி, ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் ஊரடங்கு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சனி, ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் ஊரடங்கு

Added : ஏப் 21, 2021
Share
புதுச்சேரி:''புதுச்சேரியில் வார இறுதி நாட்களில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்,'' என, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி மாநிலத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்நிலைக் கூட்டம், ராஜ்நிவாசில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நேற்று நடந்தது. பின், கவர்னர் அளித்த பேட்டி:புதுச்சேரி முழுதும் வெள்ளிக்கிழமை இரவு முதல்,

புதுச்சேரி:''புதுச்சேரியில் வார இறுதி நாட்களில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்,'' என, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்நிலைக் கூட்டம், ராஜ்நிவாசில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நேற்று நடந்தது. பின், கவர்னர் அளித்த பேட்டி:புதுச்சேரி முழுதும் வெள்ளிக்கிழமை இரவு முதல், திங்கட்கிழமை காலை வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மற்ற நாட்களில் கடைகள், அங்காடிகள் பகல், 2:00 மணி வரை மட்டுமே இயங்கும்.

அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். பகல், 2:00 மணிக்கு மேல், ஓட்டல்களில் பார்சல் வாங்கிச் செல்லலாம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆட்கள் அனுமதிக்கப்படுவர்.வழிபாட்டுத் தலங்களில் ஊர்வலங்கள், தேரோட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X