பொது செய்தி

தமிழ்நாடு

50 சதவீதம் விருந்தினர் அனுமதிக்க கோரிக்கை

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
கோவை,:'திருமண மண்டபங்களில், இருக்கை கொள்ளளவில் 50 சதவீதம் எண்ணிக்கையில் விருந்தினர்கள் பங்கேற்கும் வகையில், விழா நடத்த அனுமதிக்க வேண்டும்' என்று மண்டப உரிமையாளர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.கோவை மாவட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர், கலெக்டரிடம் நேற்று அளித்த மனு விவரம்:திருமண மண்டபங்கள் ஆண்டுக்கு நான்கு மாதங்கள் சுபகாரியங்கள், விழாக்கள் நடத்துவதற்கு

கோவை,:'திருமண மண்டபங்களில், இருக்கை கொள்ளளவில் 50 சதவீதம் எண்ணிக்கையில் விருந்தினர்கள் பங்கேற்கும் வகையில், விழா நடத்த அனுமதிக்க வேண்டும்' என்று மண்டப உரிமையாளர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.கோவை மாவட்ட திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர், கலெக்டரிடம் நேற்று அளித்த மனு விவரம்:திருமண மண்டபங்கள் ஆண்டுக்கு நான்கு மாதங்கள் சுபகாரியங்கள், விழாக்கள் நடத்துவதற்கு பதிவு செய்யப்படுகின்றன. இந்த வருமானம் மூலமே மண்டப உரிமையாளர்கள், சார்ந்து தொழில் செய்வோர் அனைவரும் பயன்பெறுகின்றனர்.எனவே, கொரோனா தொற்று காலத்தில், திருமண மண்டபங்களின் இருக்கை கொள்ளளவில், 50 சதவீதம் எண்ணிக்கையில் விருந்தினர்கள் பங்கேற்கும் வகையில், விழா நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X