தமிழ்நாடு

இந்த அழகு தேவையே இல்லை! மரங்களை வெட்டி, பசுமை சிதைப்பு :நாசமாகி வருகிறது நம்ம ரேஸ்கோர்ஸ்!

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், குளங்களில் நடக்கும் பணிகளில், நீர் நிற்கும் பரப்பைக் குறைத்து, சாலை, நடைபாதை போன்ற கட்டமைப்புகளை உருவாக்குவதாக, ஏற்கனவே புகார்கள் குவிந்து வருகின்றன.அதே போன்று, மாதிரிச்சாலை என்ற பெயரில், ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டின் அகலமும் குறுக்கப்பட்டிருப்பதாக, அங்குள்ள மக்கள் குமுறுகின்றனர்.அனைத்துக்கும் மேலாக, கோவை மாநகரின்
இந்த அழகு தேவையே இல்லை! மரங்களை வெட்டி, பசுமை சிதைப்பு :நாசமாகி வருகிறது நம்ம ரேஸ்கோர்ஸ்!

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், குளங்களில் நடக்கும் பணிகளில், நீர் நிற்கும் பரப்பைக் குறைத்து, சாலை, நடைபாதை போன்ற கட்டமைப்புகளை உருவாக்குவதாக, ஏற்கனவே புகார்கள் குவிந்து வருகின்றன.அதே போன்று, மாதிரிச்சாலை என்ற பெயரில், ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டின் அகலமும் குறுக்கப்பட்டிருப்பதாக, அங்குள்ள மக்கள் குமுறுகின்றனர்.
அனைத்துக்கும் மேலாக, கோவை மாநகரின் இதயப்பகுதியும், மக்களின் இதயம் கவர்ந்த பகுதியுமான ரேஸ்கோர்ஸ்சில், நடந்து வரும் மாதிரிச்சாலைப் பணிகள், மண்ணின் மைந்தர்களை கொந்தளிக்க வைத்துள்ளன.மரங்கள் வேரோடு அகற்றம்41 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் இந்தப் பணிகளுக்காக, பல ஆண்டுகளாக இருந்த மரங்கள் வேரோடு அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசுக் கல்லுாரி எதிரிலிருந்த சிறுவர் பூங்காவில் இருந்த சந்தனமரங்கள் உட்பட அனைத்து மரங்களும் அகற்றப்பட்டு, அந்த இடம் மொட்டையாக்கப்பட்டுள்ளது.அதேபோன்று 2.6 கி.மீ., தொலைவுள்ள நடைபாதைக்கும், உள் பகுதியிலுள்ள காம்பவுண்டுக்கும் இடையில் இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட, சின்னச் சின்ன மரங்களையும் சின்ன பொக்லைன் போன்ற வண்டியை வைத்து அடியோடு சாய்த்துள்ளனர். மரங்களை அகற்றும் பணியை, நள்ளிரவில் துவக்கி அதிகாலைக்குள் முடித்து, அங்கு மரம் இருந்ததற்கான தடயமின்றி, அதன் மீது கற்களைப் பதித்து விடுகின்றனர்.
பெரிய மரங்களுக்கு அடியில் இரண்டு அடிக்குக் கீழே தோண்டி, அதன் வேர்களைத் துண்டித்து வருகின்றனர். இதனால் பல மரங்கள், பாதி பச்சையத்துடனும், பாதி கருகியும் காணப்படுகின்றன.இவற்றில் எத்தனை மரங்கள் எப்போது விழுமென்று தெரியவில்லை. கோவையின் தனித்துவமான அடையாளமாக இருந்த, தாமஸ் பார்க் பகுதியின் அழகும் சிதைக்கப்பட்டுள்ளது.அங்கு பல ஆண்டுகளாக இருந்த போன்சாய் மரங்களையும், மிகப்பழமையான செடி,கொடிகளைக் கொண்டிருந்த சாலைத்தீவையும் அகற்றி, அங்கு ஒரு பிரமாண்ட உள் விளையாட்டு அரங்கத்தைக் கட்டமைக்கின்றனர்.
கால்பந்து பயிற்சிக்களம் என்றும், ஷட்டில் கோர்ட் என்றும், திறந்த வெளி திரையரங்கம் என்று, மாற்றி மாற்றி பதில் தருகின்றனர்.மாயமாகிறது பசுமைஇவ்வாறு ரேஸ்கோர்ஸ் பகுதியில் நுாற்றாண்டுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வந்த இயற்கை, கோவை மக்களின் கண் முன்பே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பந்தயச்சாலை என்பதற்கான நீள் வட்டமும் துண்டாடப்பட்டிருக்கிறது. இங்கு 'வாக்கிங்' வந்தால், சுத்தமான காற்று கிடைக்கும்; மரங்கள், மலர்ச்செடிகள், குளுமையான சீதோஷ்ண நிலை ஆகியவற்றால், அங்கு வருவோரின் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்பதால்தான், ரேஸ்கோர்ஸ் பகுதியை கோவையின் பொதுச்சொத்தாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.இப்போது அந்த சூழல் தன்மையைக் கெடுத்து, ஒளிரும் விளக்குகள், இரும்பு அலங்காரக் கட்டமைப்புகள், கிரானைட் தளங்கள், பெஞ்சுகள் என்று சூட்டைக் கிளப்புவதற்கான, அனைத்து வேலைகளையும், மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இந்தப் பணிகளை நிறுத்தி, இயற்கையை சிதைக்காமல், கூடுதலாக மரங்களை அமைத்து, அதன் சூழல் தன்மை கெடாத வகையில், மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய வேண்டுமென்று, கோவை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, ரேஸ்கோர்ஸ்சில் இயற்கையை அழிக்கும் பணிகளை, மாநகராட்சி நிறுத்த வேண்டியது அவசர அவசியம்!இன்று ரேஸ்கோர்ஸ்சில் நடக்கிறதுகறுப்பு உடை... எதிர்ப்பு நடை!ரேஸ்கோர்ஸ்சில் நடக்கும் குதறல் பணிகளைக் கண்டித்து, எதிர்ப்பைப் பதிவு செய்ய, இன்று காலை 6:30 முதல் 7:30 மணி வரை, கறுப்புச் சட்டையோ, கையில் கறுப்புப்பட்டையோ அணிந்து, வழக்கம்போல 'வாக்கிங்' செல்ல கோவாசிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதே விஷயத்தை வலியுறுத்தி, பல்வேறு சூழல் அமைப்புகள் சார்பில், ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்தும் பெறப்படுகிறது. ஐயாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஒரு மரத்தை கூட வெட்டலையாம்; மறுக்கிறார் மாநகராட்சி கமிஷனர்!ரேஸ்கோர்ஸ்சில் நடக்கும் பணிகளைக் கண்டித்து, ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்துப் பெறும் முயற்சி குறித்து, கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதில், 'ரேஸ்கோர்ஸ் மாதிரிச்சாலைப் பணியில், ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை. புதர்கள் மற்றும் செடிகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. தவறான தகவல் பரப்பப்படுகிறது. விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவதாகக் கூறப்படுவது யூகம். தாமஸ் பார்க் பகுதியில் 'புட்சால்' எனப்படும் விளையாட்டு மைதானமே அமைக்கப்படுகிறது.
அங்குள்ள சாலைத்தீவு சீரமைக்கப்படுகிறது' என்று கூறியுள்ளார்.கமிஷனரின் இந்த அறிக்கைக்குப் பதிலடி தரும் வகையில், சமூக ஊடகங்களில் சிறுவர் பூங்கா உள்ளிட்ட ரேஸ்கோர்ஸ்சின், பல்வேறு பகுதிகளில் முன்பு மரங்களுடன் இருந்த இடங்கள், இப்போது மைதானமாக இருக்கும் புகைப்படங்களையும், விளம்பர விளக்கு புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
21-ஏப்-202110:25:25 IST Report Abuse
தல புராணம் இது சாம்பிள். எட்டு வழிச்சாலை வேணும்ன்னு சொன்னவன் எல்லாம் இங்கே வந்து பாக்கலாம். லஞ்ச சாக்கடை ஆடீம்காவின் அட்டூழியங்களும, கமிசன வாங்கி முட்டுக் கொடுக்கும் பீசப்பிகளின் அசிங்கமும். 😡
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X