கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஷேர் புரோக்கர்'களுக்கு சலுகை 'செபி'க்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
மதுரை:பங்குச் சந்தையில், புரோக்கர்கள் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் வசதிக்கு தடை கோரிய வழக்கில், 'செபி'க்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், ஆவுடையானுார் ஆறுமுகசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:தேசிய பங்குச் சந்தை, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் இணையதள சர்வர் நேரடி இணைப்பு வசதி - 'கோலொகேஷன் சர்வீஸ்'

மதுரை:பங்குச் சந்தையில், புரோக்கர்கள் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் வசதிக்கு தடை கோரிய வழக்கில், 'செபி'க்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், ஆவுடையானுார் ஆறுமுகசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:

தேசிய பங்குச் சந்தை, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் இணையதள சர்வர் நேரடி இணைப்பு வசதி - 'கோலொகேஷன் சர்வீஸ்' சில புரோக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், பங்குச் சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற, இறக்கங்களை உடனடியாக புரோக்கர்கள் அறிந்து கொள்கின்றனர். தொலைதுாரத்தில் இருப்பவர்களுக்கு, 'ஆன்லைன்' தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.'கோலோகேஷன் சர்வீஸ்' வசதி மூலம், சில புரோக்கர்கள் மட்டுமே பங்கு வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. மற்றவர்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

பாரபட்சமான, கோலொகேஷன் சர்வீசஸ் வசதிக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, செபி, தேசிய பங்குச் சந்தைக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக., 9க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X