சம்பவம் செய்தி

தமிழ்நாடு

படகு இல்லம் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
ஊட்டி:படகு இல்லம் மூடப்பட்டதால், வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்தி தர கோரி, தற்காலிக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் நேற்று முதல் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் வர, முழு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்,'ஊட்டி படகு இல்லத்தில், படகு
 படகு இல்லம் ஊழியர்கள்  உள்ளிருப்பு போராட்டம்

ஊட்டி:படகு இல்லம் மூடப்பட்டதால், வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்தி தர கோரி, தற்காலிக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் நேற்று முதல் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் வர, முழு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்,'ஊட்டி படகு இல்லத்தில், படகு இயக்குபவர்கள், எலக்ட்ரீஷியன், என, 50க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் ,' தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்தி தர படகு இல்லம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, படகு இல்லம் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.படகு இல்லம் நிர்வாகம் கூறுகையில்,' மாநில அரசின் உத்தரவு, நாங்கள் எதுவும் செய்ய முடியாது. சுற்றுலா கழகத்தின் மூலம் மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X