அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.சி.,க்கு 76 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்ய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை:'தமிழகத்தில் தொழில் பழகுனர் தேர்வின் போது இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 76 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதையும் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:சென்னை மணலியில் செயல்படும் சென்னை உர நிறுவனத்திற்கு 45 தொழில் பழகுனர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
 ஓ.பி.சி.,க்கு 76 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்ய  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:'தமிழகத்தில் தொழில் பழகுனர் தேர்வின் போது இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 76 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதையும் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னை மணலியில் செயல்படும் சென்னை உர நிறுவனத்திற்கு 45 தொழில் பழகுனர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஓ.பி.சி. மக்கள் தொகை 76 சதவீதம் என்பதால் அப்பிரிவினருக்கு 45 தொழில் பழகுனர் இடங்களில் 34 இடங்கள் ஒதுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் 12 இடங்கள் அதாவது 27 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த சமூக அநீதியை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் தான் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான ஓ.பி.சி. ஒதுக்கீடு என்பது சமூக நீதியாக இருக்காது.

அந்தந்த மாநிலங்களில் ஓ.பி.சி. மக்கள் தொகைக்கு இணையாக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இந்த சட்டத்திற்கு எதிராக வகுக்கப்பட்ட தொழில் பழகுனர் விதிகள் செல்லாது என மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தொழில் பழகுனர்கள் தேர்வின் போது ஓ.பி.சி.க்கு 76 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். முழுக்க முழுக்க உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே இடங்கள் வழங்கப் படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் 'டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.SRIRAM - CHENNAI,இந்தியா
21-ஏப்-202120:45:34 IST Report Abuse
C.SRIRAM எத்தனை நாட்கள் தான் இந்த மாதிரி ஆட்கள் மக்களில் ஒரு சாராரை ஏமாற்றிக்கொன்டே இருப்பார்களோ . வரி வருவாய்க்கு மட்டும் எல்லாரும் வரி கட்ட வேண்டும் . வந்துட்டாங்க நாட்டை நாசமாக்க .
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
21-ஏப்-202120:25:12 IST Report Abuse
C.SRIRAM அரசு வரி விதிப்பிலும் "76" சதவீதத்தை "O.B.C" களிடமிருந்தே பெறட்டும் . எல்லாரும் வரி கொடுக்க வேண்டுமாம் . மக்களில் ஒரு சாராருக்கு மட்டும் சலுகையாம் ?. போங்கையா நீங்களும் உங்க நியாயமும் . "OBC" யில் பண வசதி உடையவருக்கும் சலுகையாம் ஆனால் வஞ்சிக்கப்பட்ட "F,C" (அதாவது பொது பிரிவு) ஏழைக்கு ஒரு சலுகையும் கிடையாதாம் ?. இதை விட ஒரு சமூக அநீதி இல்லை . உங்கள் நியாயத்தை குப்பையில் போடுங்கள்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
21-ஏப்-202118:01:34 IST Report Abuse
r.sundaram படித்த இவரே இப்படி பேசினால், முற்பட்ட வகுப்பினர் என்று சொல்லப்படுபவர்களுக்கு ஒன்றுமே கிடையாதா? அவர்களிலும் ஏழ்மையில் உள்ளவர்கள் இல்லையா? அவர்களை யார் ஆதரிப்பது? முற்பட்ட வகுப்பினர் சாகத்தான் வேண்டுமா? அரசு வேலையில் திறமைக்கு மதிப்பு கிடையாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X