பொது செய்தி

தமிழ்நாடு

7 பேர் பலியான விவகாரம்: ஒரு வாரத்தில் அறிக்கை

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுார் அரசு மருத்துவமனையில், ஏழு பேர் பலியானது குறித்து, ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஏழு பேர், நேற்று முன்தினம் உயிரிழந்தனர். 'ஆக்சிஜன்' சப்ளையில் ஏற்பட்ட குளறுபடியால், அவர்கள் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். கலெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை

வேலுார்:வேலுார் அரசு மருத்துவமனையில், ஏழு பேர் பலியானது குறித்து, ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஏழு பேர், நேற்று முன்தினம் உயிரிழந்தனர். 'ஆக்சிஜன்' சப்ளையில் ஏற்பட்ட குளறுபடியால், அவர்கள் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். கலெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி, 'ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை' எனக் கூறினார்.பின், ஏழு பேர் இறப்புக்கான காரணம் குறித்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு, நேற்று வேலுார் அரசு மருத்துவமனைக்கு வந்து, ஆக்சிஜன் பிளான்டை பார்வையிட்டார். சம்பவம் நடந்த போது, பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் இறந்தவர்கள் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஏழு பேர் இறந்த சம்பவம் குறித்து, ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இதன்படி, மருத்துவமனை, 'டீன்' செல்வி தலைமையில், 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், கொரோனா வார்டு, சிறப்பு வார்டுகளுக்கு செல்லும் ஆக்சிஜன் பைப் லைன் ஐஸ் கட்டியாக உறைந்ததை அகற்றி விட்டு, புதிதாக மாற்றப்பட்டு, ஆக்சிஜன் கசிவு நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X