பொது செய்தி

தமிழ்நாடு

சூரியசக்தி மின் நிலையம் அமைக்க 10,000 ஏக்கர் நிலம் வாங்குது வாரியம்

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
சென்னை:மத்திய அரசின், என்.எல்.சி., எனப்படும், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்காக, தமிழக மின் வாரியம், 10 ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்க உள்ளது.மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காதசூரியசக்தி மின்சாரத்தை ஊக்கப்படுத்தி வருகிறது.அதற்காக, என்.டி.பி.சி., எனப்படும், தேசிய அனல் மின் கழகம், என்.எல்.சி., போன்ற பொதுத்துறை நிறுவனங்களை, மாநில மின்
 சூரியசக்தி மின் நிலையம் அமைக்க  10,000 ஏக்கர் நிலம் வாங்குது வாரியம்

சென்னை:மத்திய அரசின், என்.எல்.சி., எனப்படும், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்காக, தமிழக மின் வாரியம், 10 ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்க உள்ளது.மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காதசூரியசக்தி மின்சாரத்தை ஊக்கப்படுத்தி வருகிறது.அதற்காக, என்.டி.பி.சி., எனப்படும், தேசிய அனல் மின் கழகம், என்.எல்.சி., போன்ற பொதுத்துறை நிறுவனங்களை, மாநில மின் வாரியங்களுடன் இணைந்து, பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்குமாறு அறிவுறுத்திஉள்ளது.அதன்படி, தமிழகத்தில், என்.எல்.சி., நிறுவனம், 2,000 மெகாவாட் திறனில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு, 10 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவை.அந்த நிலத்தை, மின் வாரியம் வாங்கி கொடுக்க உள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:என்.எல்.சி., மின் நிலையமும், தமிழக மின் வாரியமும், கூட்டு நிறுவனத்தின் வாயிலாக, 2,000 மெகா வாட் திறனில், பிரமாண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைக்க உள்ளன. அதில், மின் வாரியத்தின் பங்கு மிக சிறியது.மொத்தம், 2,000 மெகா வாட் மின் நிலையத்தை ஒரே இடத்தில் அமைக்க, 10 ஆயிரம் ஏக்கர் தேவை. அந்த அளவிற்கு, ஒரே இடத்தில் நிலம் கிடைக்குமா என, தெரியவில்லை.இல்லையேல், ஒரு இடத்தில் குறைந்தது, 250 மெகா வாட் திறனில் மின் நிலையம் அமைக்கப்படும்.அதற்கு, 500 ஏக்கர் தேவை. எனவே, குறைந்தது, 500 ஏக்கர் முதல் அதிகபட்சம், 10 ஆயிரம் ஏக்கர் வரை வாங்கப்பட உள்ளது.அந்த நிலம் மின் வாரியத்தின், 765 கிலோ வோல்ட், 400, 230 கி.வோ., திறன் உடைய துணை மின் நிலையங்களில் இருந்து, 30 கி.மீ., துாரத்திற்குள் இருக்க வேண்டும்.நிலம் வழங்குவோருக்கு, சந்தை மதிப்பீட்டு தொகை வழங்கப்படும். என்.எல்.சி., அமைக்கும் சூரியசக்தி மின்நிலையத்தில் இருந்து, குறிப்பிட்ட அளவு மின்சாரம், தமிழகத்திற்குகிடைக்கும்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X