சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியவர் கைது

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
சென்னை:தாம்பரத்தில் இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த 29 வயது இளம் பெண் 2015ல் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள 'மெப்ஸ்' சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.அப்போது பல்லாவரம் ராஜாஜி நகர் சுப்ரமணியம் கோவில் 2வது தெருவைச் சேர்ந்த சந்தியாராஜ் 31,

சென்னை:தாம்பரத்தில் இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த 29 வயது இளம் பெண் 2015ல் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள 'மெப்ஸ்' சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.அப்போது பல்லாவரம் ராஜாஜி நகர் சுப்ரமணியம் கோவில் 2வது தெருவைச் சேர்ந்த சந்தியாராஜ் 31, என்பவரும் உடன் பணிபுரிந்தார்.

2017ல் போலி முகவரி வாயிலாக முகநூலில் தான் ஒரு பெண் நர்ஸ் எனக்கூறி சந்தியாராஜ் இளம் பெண்ணிடம் அறிமுகமானார்.அவரிடம் இம்மாதம் 16ம் தேதி இளம் பெண் தன் உடலில் உள்ள குறைகளை புகைப்படம் வாயிலாக பகிர்ந்து சந்தேகங்கள் கேட்டுள்ளார்.நர்ஸ் எனக் கூறி அறிமுகமான சந்தியாராஜ் இளம்பெண்ணிடம்'என் நண்பர் சென்னையில் உள்ளார் அவரை சந்தியுங்கள்' எனக்கூறியுள்ளார்.

அவரது பேச்சை நம்பி சென்ற இளம்பெண்ணை பல்லாவரத்தில் உள்ள ஒரு இடத்தில் வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி உடைகளை களைந்து ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். பின் அதை வைத்து இரண்டு நாட்களாக பணம் கேட்டு இளம் பெண்ணை மிரட்டியுள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தாம்பரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து சந்தியாராஜை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X