பொது செய்தி

தமிழ்நாடு

வார விடுப்பு ஞாயிறுக்கு மாற்றம்

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
சேலம்:போக்குவரத்து தொழிலாளர்களின் வார விடுப்பை ஊரடங்கு நாளான ஞாயிறுக்கு மாற்றி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் டிரைவர் கண்டக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அரசு போக்குவரத்துக்கழகத்தின் 22 ஆயிரத்து 125 பஸ்களின் இயக்கம் பராமரிப்பு பணியில் 1.35 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க

சேலம்:போக்குவரத்து தொழிலாளர்களின் வார விடுப்பை ஊரடங்கு நாளான ஞாயிறுக்கு மாற்றி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் டிரைவர் கண்டக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு போக்குவரத்துக்கழகத்தின் 22 ஆயிரத்து 125 பஸ்களின் இயக்கம் பராமரிப்பு பணியில் 1.35 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்று அனைத்து அரசு பஸ்களின் இயக்கமும் முடங்கும்.

வழக்கமாக வார விடுமுறையில் தொழிலாளர்கள் பணிக்கு வந்தால் சம்பளம் வழங்க வேண்டும். மாற்றாக அதே நாளில் பணி வழங்கப்படாமல் மாற்று நாளில் அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும்.

இதனால் தமிழகத்தின் 325 பணிமனைகளில் பணிபுரியும் டிரைவர் கண்டக்டர்கள் தொழில் நுட்ப பணியாளர்களின் வார விடுப்பை ஞாயிறுக்கு மாற்றி கிளை மேலாளர்கள் உத்தரவிட்டு உள்ளனர். இது டிரைவர் கண்டக்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X