புயலால் இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
நியூயார்க்:இந்தியா - வங்கதேசம் இடையே உருவான 'அம்பன்' புயல் ஏற்படுத்திய சேதத்தில் இந்தியாவுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச வானிலை நிறுவனம் 2020ன் பருவநிலை குறித்த ஆய்வறிக்கை தயாரித்து உள்ளது. இதை ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்டார்.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியா -

நியூயார்க்:இந்தியா - வங்கதேசம் இடையே உருவான 'அம்பன்' புயல் ஏற்படுத்திய சேதத்தில் இந்தியாவுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வானிலை நிறுவனம் 2020ன் பருவநிலை குறித்த ஆய்வறிக்கை தயாரித்து உள்ளது. இதை ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்டார்.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியா - வங்கதேசம் எல்லையில் வங்காள விரிகுடாவின் கிழக்கே மே 20ல் அம்பன் புயல் உருவானது. இது தான் இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் மிக அதிக அளவில் சேதத்தைஏற்படுத்திய புயல்.

இந்த புயல் காரணமாக இந்தியாவுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.மேற்குவங்கம் ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த் 24 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.வங்கதேசத்தில் 25 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக அம்பன் புயலால் ஏற்பட்ட இறப்பு 129 என்ற அளவில் குறைவாக இருந்தது.உலகளவில் 2020ல் உருவான 30 புயல்களில் வடக்கு அட்லாண்டிக் பகுதி அதிக புயல்களை சந்தித்து முதலிடத்தை பிடித்துள்ளது.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X