அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' கடைகளை மூடபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
சென்னை:'டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அவர் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல. மக்களை பாதிக்காத வகையில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மக்கள் அதிகமாகக்

சென்னை:'டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

அவர் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல. மக்களை பாதிக்காத வகையில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மிகவும் முக்கியமாக டாஸ்மாக் மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். இதன் வழியே கொரோனா, 200 வகையான நோய் பாதிப்பு களில் இருந்தும் மக்களை காப்பாற்ற முடியும்.இவை அனைத்தையும் விட முக்கியமானது மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். முகக்கவசம் அணியுங்கள். தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X