அரசியல் செய்தி

தமிழ்நாடு

சத்தியமூர்த்தி பவனில் உதவி மையம் திறப்பு

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் சார்பில் உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.சென்னை சத்தியமூர்த்தி பவனில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை துவக்கி வைத்து தமிழக காங். தலைவர் அழகிரி கூறியதாவது:பிரதமர் மோடி 135 கோடி மக்களுக்கும் பொதுவான பிரதமராகச் செயல்படவில்லை. மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக காங். -

சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் சார்பில் உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை துவக்கி வைத்து தமிழக காங். தலைவர் அழகிரி கூறியதாவது:பிரதமர் மோடி 135 கோடி மக்களுக்கும் பொதுவான பிரதமராகச் செயல்படவில்லை. மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக காங். - எம்.பி. ராகுல் மக்கள் நலனில் அக்கறையோடு தேர்தல் பரப்புரையை ரத்து செய்துள்ளார்.

ஆனால் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ. தலைவர்கள் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயல்படுகின்றனர். அவர்களின் முயற்சி வெற்றி பெறாது.இதன் வழியே பா.ஜ.வுக்கு கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதை விட தேர்தல் பரப்புரை வழியே ஆதாயம் தேடுகிற நோக்கம் தான் மிஞ்சியிருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் பழுதால் நான்கு நோயாளிகள் பலியான செய்தி மிகுந்த வேதனையை தருகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை திறப்பதில் அக்கறை காட்டிய அ.தி.மு.க. அரசு ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் தீவிரம் காட்டவில்லை.அதன் விளைவே இத்தகைய இறப்புகள். தற்போது மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகள் அல்லல்படுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதை அ.தி.மு.க. அரசு அலட்சியப் போக்குடன் கையாண்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பொருளாதார சீர்குலைவு ஏற்படாமல் கொரோனாவை ஒழிக்க ஒரே வழி 18 வயது நிரம்பிய அனைவருக்கும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். இவ்வாறு அழகிரி கூறினார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் உதவி பெற 98844 66333 என்ற அலைபேசி எண்ணில் காங். உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X