சுருக்கு மடி வலைக்கு அனுமதி கோரிய மனு:சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சுருக்கு மடி வலைக்கு அனுமதி கோரிய மனு:சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Added : ஏப் 21, 2021
Share
சென்னை:கடலில் 5 கி.மீ. தொலைவுக்கு சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மீனவர் நல அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு 5 கி.மீ. துாரத்துக்குள் சுருக்கு மடி வலையை பயன்படுத்தலாம் என பரிந்துரைத்துள்ளது. அதன்படி சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க

சென்னை:கடலில் 5 கி.மீ. தொலைவுக்கு சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மீனவர் நல அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு 5 கி.மீ. துாரத்துக்குள் சுருக்கு மடி வலையை பயன்படுத்தலாம் என பரிந்துரைத்துள்ளது. அதன்படி சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ''சுருக்கு மடி வலைக்கு தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.இந்த வழக்கில் ஒன்றுமில்லை. ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துஉள்ளோம் '' என்றார்.

இருதரப்பு வாதங்களுக்கு பின் முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:மாநில அரசு மறுபரிசீலனை செய்து சுருக்கு மடி வலையை பயன்படுத்துவது நீண்ட காலமாக மீன் பிடிப்பதற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதகமாக இருக்கும் என கருதி உள்ளது.மீனவர்களின் நீண்ட காலம் நலன் கருதி மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக முடிவெடுப்பது அதிகாரிகளின் தனிப்பட்ட உரிமை.இந்தப் பிரச்னை தொடர்பாக அதிகாரிகள் மனதை செலுத்தி நியாயமான முகாந்திரத்தின் பேரில் முடிவெடுத்தால் அதை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய தேவையில்லை.

ஏற்கனவே மாநில அரசும் மறுபரிசீலனை செய்து சுருக்கு மடி வலை பயன்படுத்த விதிக்கப் பட்ட தடையை தொடர்வது என முடிவெடுத்துள்ளது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X