பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு?

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி ": கொரோனா தடுப்பூசி மருந்து இறக்குமதிக்கு, மத்திய அரசு, சுங்க வரி விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரு தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இம்மாத இறுதியில், ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி மருந்து இறக்குமதியாக உள்ளது. அனுமதிஇதன் தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமையை, டாக்டர் ரெட்டீஸ்
தடுப்பூசி, இறக்குமதி, சுங்க வரி, விலக்கு?

புதுடில்லி ": கொரோனா தடுப்பூசி மருந்து இறக்குமதிக்கு, மத்திய அரசு, சுங்க வரி விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரு தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இம்மாத இறுதியில், ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி மருந்து இறக்குமதியாக உள்ளது.


அனுமதி


இதன் தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமையை, டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தினமும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதை கட்டுப்படுத்த, வரும், மே 1 முதல், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதித்து உள்ளது.

இதனால், தடுப்பூசி மருந்திற்கான தேவை அதிகரிக்கும் என்பதால், அமெரிக்காவின், 'பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன்' உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பூசி மருந்திற்கு, அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news




இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசி மருந்துகளுக்கு தற்போது, 10 சதவீதம் சுங்க வரி, 16.5 சதவீதம், ஐ.ஜி.எஸ்.டி., மற்றும் சமுக நல கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.


பரிசீலிக்கப்படும்


இறக்குமதியாகும் தடுப்பூசி மருந்துகள், வெளிச் சந்தையில் விற்க அனுமதிக்கப்படும் என்பதால், அவற்றின் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, கொரோனா தடுப்பூசி மருந்து இறக்குமதிக்கு, சுங்க வரி விலக்கு அளிப்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், சுங்க வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தால், அதை மத்திய அரசு ஏற்று, உத்தரவு பிறப்பிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGESAN - namakkal,இந்தியா
21-ஏப்-202110:25:57 IST Report Abuse
MURUGESAN நல்ல விஷயம்
Rate this:
Cancel
balasubramanian ramanathan - vadakupatti,இந்தியா
21-ஏப்-202107:27:22 IST Report Abuse
balasubramanian ramanathan இப்போது இருக்கும் பிராண்டை தவிர பதிய பிராண்டு மருந்துகள் உள்நாட்டு உற்பத்தி தொடங்க/எண்ணிக்கையை அதிகப்படுத்த கால அவகாசம் வேண்டும் அதுவரை இடைக்கால அடிப்படையில் இறக்குமதி தவிர்க்கமுடியாதது.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21-ஏப்-202111:15:31 IST Report Abuse
Mirthika Sathiamoorthiபடிக்காதவன் தனுஷ் படத்தில் விவேக் காமெடி...நாம் கூட்டியும் கொடுக்குறோம் போட்டும் கொடுக்குறோம்...நாம மருந்துகளை ஏற்றுமதியும் பண்றோம் இறக்குமதியும் பண்றோம்.......
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
21-ஏப்-202104:23:56 IST Report Abuse
blocked user நாமே உற்பத்தி செய்வதை விட்டுவிட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் லாபம் பார்க்க எப்படி அனுமதிக்க முடியும்? தவிரவும் தடுப்பூசி போட முன்வருபவர்களின் எண்ணிக்கை ஒன்றும் நம்பிக்கையூட்டும் வகையில் இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X