பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த எண்ணிக்கையில் ஆம்னி பஸ்கள் ஓடும்

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் பகலில் மட்டும், குறைந்த எண்ணிக்கையில் ஆம்னி பஸ்களை இயக்க, சங்கங்கள் முடிவு செய்துள்ளன.தமிழகத்தில், 4,000 ஆம்னி பஸ்கள் உள்ளன. இவை, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கும் இயக்கப்படுகின்றன. கடந்தாண்டு ஊரடங்கு அமலான நிலையில், எட்டு மாதங்கள் ஆம்னி பஸ்களை இயக்க வில்லை. இந்தாண்டு ஜனவரிக்கு பின், 600

சென்னை:தமிழகத்தில் பகலில் மட்டும், குறைந்த எண்ணிக்கையில் ஆம்னி பஸ்களை இயக்க, சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில், 4,000 ஆம்னி பஸ்கள் உள்ளன. இவை, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கும் இயக்கப்படுகின்றன. கடந்தாண்டு ஊரடங்கு அமலான நிலையில், எட்டு மாதங்கள் ஆம்னி பஸ்களை இயக்க வில்லை. இந்தாண்டு ஜனவரிக்கு பின், 600 பஸ்கள் வரை இயக்கப்பட்டன. இந்த மாதம், கொரோனா பரவல் அதிகரித்ததால், 160க்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் ஆம்னி பஸ்களுக்கு பயணியரிடம் வரவேற்பு பெரிதாக இருக்காது என்பதால், ஊரடங்கு முடியும் வரை பஸ்களை இயக்க போவதில்லை என, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஒரு தரப்பினர் அறிவித்தனர்.

மற்றொரு தரப்பினர், 'ஆம்னி பஸ்களை இயக்கும் உரிமையாளர்களை தடுக்கக்கூடாது' என்றனர்.இதையடுத்து, நடந்த, ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில், பயணியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறைந்த அளவில் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X