பொது செய்தி

தமிழ்நாடு

பச்சை, மஞ்சள், சிவப்பு நிற குடை மிளகாய் : திண்டுக்கல்லில் சோதனை முறையில் சாகுபடி

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் சோதனை முறையில் 'இஸ்ரேல்' நாட்டின் மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களில் குடை மிளகாய் சாகுபடியாகிறது.இம் மையத்தில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் பாலி, நெட் ஹவுஸ், பசுமைநிழல் வலை குடில் அமைத்து காய்கறி சாகுபடி செய்கின்றனர். தற்போது காற்றோட்டம் உள்ள பசுமைக் குடிலில் 'இஸ்ரேல்'

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் சோதனை முறையில் 'இஸ்ரேல்' நாட்டின் மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களில் குடை மிளகாய் சாகுபடியாகிறது.

இம் மையத்தில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் பாலி, நெட் ஹவுஸ், பசுமைநிழல் வலை குடில் அமைத்து காய்கறி சாகுபடி செய்கின்றனர். தற்போது காற்றோட்டம் உள்ள பசுமைக் குடிலில் 'இஸ்ரேல்' நாட்டில்இருந்து கொண்டு வரப்பட்ட பச்சை, மஞ்சள், சிவப்பு நிற குடை மிளகாய்களை சோதனை முறையில் சாகுபடி செய்கின்றனர்.

தற்போது செடிகளில் மிளகாய் காய்த்து தொங்குகிறது. அங்கு 720 ச.மீ., ல் 516 குடை மிளகாய் செடிகளை நடவு செய்துள்ளனர். செடிக்கு தேவையான உரத்தை சொட்டு நீர் பாசன முறையில் பாய்ச்சுகின்றனர். சாதாரண நடவு முறையை விட, இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் ஒரு ஏக்கரில் 15 டன் வரை மகசூல் கிடைக்கும்.

தோட்டக்கலை துணை இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், ''ஒரு கிலோ குடை மிளகாய் ரூ.40 க்கு விற்கிறது. விசேஷ நாட்களில் கிலோ ரூ.130 வரை விற்கும். இங்கிருந்து சென்னை, கோவைக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம். சாகுபடி செய்ய விரும்புவோர் மகத்துவ மையத்தை அணுகலாம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X