பொது செய்தி

இந்தியா

ஹிந்து மதத்தவருக்கு இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம் சகோதரர்கள்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கமரெட்டி: தெலுங்கானாவில், கொரோனாவில் உயிரிழந்த ஹிந்து மதத்தைச் சேர்ந்தவருக்கு, ஹிந்து முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்த முஸ்லிம் சகோதரர்களின் செயல், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3.61 லட்சத்தை கடந்துள்ளது;
ஹிந்து, இறுதிச்சடங்கு,முஸ்லிம்

கமரெட்டி: தெலுங்கானாவில், கொரோனாவில் உயிரிழந்த ஹிந்து மதத்தைச் சேர்ந்தவருக்கு, ஹிந்து முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்த முஸ்லிம் சகோதரர்களின் செயல், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3.61 லட்சத்தை கடந்துள்ளது; பலி எண்ணிக்கை, 1,856 ஆக உயர்ந்துள்ளது.

இங்குள்ள, கமரெட்டி மாவட்டம் கட்டேபல்லி கிராமத்தில், மொகுலாயா என்பவருக்கு, சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பின், பன்சுவாடாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, கொரோனா பயம் காரணமாக, உயிரிழந்த மொகுலாயாவுக்கு இறுதிச் சடங்குகளை செய்ய, அவரது குடும்பத்தினரே மறுத்துவிட்டனர். அப்போது உடனடியாக, ஷபி மற்றும் அலி என்ற இரு முஸ்லிம் சகோதரர்கள், அவருக்கு ஹிந்து மத முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்தனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான இவர்கள், கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை, மயானங்களுக்கு எடுத்துச்செல்லும் பணிகளில்,ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மனிதாபிமான அடிப்படையில் முஸ்லிம் சகோதரர்கள் செய்த இந்த செயல், மத நல்லிணக்கத்திற்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-ஏப்-202116:13:23 IST Report Abuse
Malick Raja இந்திய நாட்டின் பெரும்பாலோனோர் அல்ல 98 % சதவீதத்தினர் இதைபோன்றே வாழ்வர் .காரணம் இந்தியர் என்ற ஒரே மதம் மனதில் இருப்பது மட்டும் மாறாத .. அல்ல அல்ல என்றும் மாற்றவே முடியாத ஒன்று என்பது மட்டும் உண்மை ..
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
21-ஏப்-202119:03:44 IST Report Abuse
sahayadhas இது மனித இயல்பு BJP கு இது அரசியல்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-ஏப்-202115:39:24 IST Report Abuse
sankaseshan மனிதாபிமான செயல் பாராட்டுதலுக்கு உரியது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X